Social Icons

Wednesday 31 October 2012

பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்

ஒரே ஆண் பெண்ணிலிருந்து தான் இந்த உலக மக்கள் அனைவரும் தோன்றினார்கள். இவர்களில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இறைவனுக்குப் பிடித்தமான வாழ்வை வாழ்வதின் மூலமே இறைவனிடத்தில் நெருங்கமுடியும்.
 ஆணாக பிறப்பது உயர்வு என்றும் பெண்ணாக பிறப்பது தாழ்வு என்றும் நினைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் முறையான வாழ்வை வாழாவிட்டால் அவன் இறைவனிடத்தில் மட்டமானவனாகிறான். கொடுங்கோலனுடைய மனைவியாக இருந்தாலும் இறைவனுக்கு உவப்பான காரியங்களை செய்தால் அவள் இறைவனிடத்தில் மதிப்புமிக்கவளாகிறாள்.
ஒரு காலத்தில் தாழ்வாக கருதப்பட்டப் பெண்களை கண்ணியப்படுத்துவதற்காக பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்றெல்லாம் கூறி பொதுவாக எல்லாப் பெண்களையும் சிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் எல்லாப் பெண்களும் சிறப்புக்குரியவர்கள் என்றக் கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை.
மாறாக இஸ்லாம் காட்டிய வழியில் நடக்கும் நற்குணமுள்ள பெண்களே தங்கம் வெள்ளி வைரம் முத்து பவளம் வைடூரியம் போன்ற உலகில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தையும் விட மதிப்பிற்குரியவர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2911)
ஒரு மனிதன் சேமிக்கின்ற சொத்துக்களில் சிறந்ததை உனக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு அது நல்ல பெண்மனியாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவுத் (1417)
மார்க்கமுள்ளப் பெண்னே ஆனுடைய வெற்றிக்குக் காரணமாக இருப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1.
அவளது செல்வத்திற்காக.
2.
அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3.
அவளது அழகிற்காக.
4.
அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)
நூல் : புகாரி (5090)
     
ஒரு பெண் நல்ல பெண்ணாக திகழ வேண்டுமென்றால் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை அவள் கடைபிடிப்பதன் மூலமே அவ்வாறு திகழ முடியும். அந்த வழிமுறைகளை ஒவ்வொன்றாக விளக்கி வெற்றிக்கு வழிகாட்டுவதே இந்நூலின் நோக்கம்.
   
இஸ்லாத்தில் பெரும்பாலான சட்டத்திட்டங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை. என்றாலும் இரு சாராரின் உடற்கூறுகள் குணங்கள் பலவீனங்கள் பொறுப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தனித்தனியான சட்டங்களையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
   
அவ்வாறு பெண்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய விஷயங்கள் ஆதாரத்துடன் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தவறு ஏதும் இருந்தால் நம் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் போது இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்வோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

                                                       -அப்பாஸ் அலி 
ஒவ்வொரு தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் Click செய்து படித்துக்கொள்ளுங்கள் 

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்