Social Icons

Wednesday 31 October 2012

கோ எஜ‚கேஷன் கூடுமோ?



கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரே வகுப்பறையில் பயிலும் கல்வி முறைக்கு கோ எஜகேஷன் என்று சொல்லப்படுகிறது. ஆணும் பெண்ணும் கல்வியை வளர்த்துக்கொள்வதற்கு இஸ்லாத்தில் பரிபூரண சுதந்திரம் உண்டு. ஆனால் கல்வி என்றப் பெயரில் ஒழுக்கங்கெட்டு நடப்பதைத் தான் இஸ்லாம் தடுக்கிறது.

    கோ எஜகேஷன் நடைமுறையில் உள்ள கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதும் கேளி கிண்டல் செய்வதும் காதலிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இது ஒரு குற்றமாகக் கருதப்படுவது கிடையாது. இப்படிப்பட்ட இடங்களுக்கு நமது பெண்களை அனுப்பினால் அவர்களும் தவறான வழிக்கு சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
   
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சபைகளில் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்களின் பார்வை பெண்களின் மீது படாதவாறு ஆண்கள் முன்னாலும் பெண்கள் பின்னாலும் அமர்வார்கள். சபை களையும் போது பெண்கள் முதலில் களைந்து செல்வார்கள். பெண்கள் சென்றதற்குப் பிறகு ஆண்கள் செல்வார்கள். இப்படியொரு அருமையான வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் கடைபிடித்துள்ளார்கள்.
   
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாமா என்ற தலைப்பின் கீழ் இதற்கான ஆதாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.    
   
இந்த வழிமுறையையும் இஸ்லாம் சொல்லும் ஒழுங்கு முறைகளையும் கல்லூரிகளில் கடைபிடித்தால் அங்கு சென்று தாரளமாக கற்கலாம். ஆனால் அப்படியொரு கல்லூரி கிடைக்காத பட்சத்தில் அல்லாஹ்விற்கு பயந்து இஸ்லாமிய ஒழுங்கு முறைகளை முழுமையாக கடைபிடித்து கல்லூரிக்குச் செல்வது தவறில்லை.
   
பெண்களுக்கென்று தனியாக கல்லூரிகள் இருந்தால் அங்கு சென்று படிப்பது சிறந்தது. 

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்