Social Icons

Wednesday 31 October 2012

தொழுகைச் சட்டங்கள்


உளூ செய்ய வேண்டிய நேரங்கள்
   
குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் முன்னால் உளூ செய்துகொள்ள வேண்டும். இது கட்டாயம் அல்ல. செய்வது சிறப்பு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் உமர் பின் அல்கத்தாப் (ர-) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்'' உளூ செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (290)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு எற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் ; முஸ்லிம் (513)





பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாமா?
   
பெண்கள் பள்ளிவாசலிற்கு செல்லக்கூடாது என்று முஸ்லிம்களில் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடைசெய்கிறார்கள். ஆனால் ஆண்களும் பெண்களும் சந்திக்கும் சபைகளுக்கும் கடைத்தெருக்களுக்கும் செல்ல அனுமதிக்கிறார்கள்.
   
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தாராளமாக பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை ஏராளமான நபிமொழிகளில் நம்மால் காணமுடியும்.
நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பü ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா பெண்ணா என்று) அறிந்துகொள்ள முடியாது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (578)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்கüன்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமüக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)
நூல் : புகாரி (707)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில், "அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும் ஆண்கள் பெண்கüடம் வருவதற்கு முன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல் : புகாரி (837)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.
 
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)
நூல் : புகாரி (1203)
(
ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ர-) அவர்கள் அவர்களை அழைத்து, "(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களு:ம உறங்கிவிட்டனர்'' என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) புறப்பட்டு வந்து, "பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை'' என்று கூறினார்கள்.   
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (862)
உமர் (ர-) அவர்கüன் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹு, இஷா ஆகியத் தொழுகையைப் பள்üயில் ஜமாஅத்தில் தொழச் செல்வார். அவரிடம், "(உங்கள் கணவர்) உமர் (ரலிலி) அவர்கள் இ(வ்வாறு செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் (பள்üக்குச்) செல்கிறீர்கள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "(என்னைப் பள்üக்குச் செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது?'' என்று கேட்க, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெண்கள் பள்üவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ர-) அவர்களைத் தடுக்கிறது'' என்று பதில் வந்தது.
   
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (900)
   
காஃப் வல்குர்ஆன் மஜீத் என்று தொடங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (மனனமாக) நான் எடுத்துக் கொண்டேன். அதை அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிம்பரில் ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரா (ரலி) அவர்களின் சகோதரி
நூல் : முஸ்லிம் (1442)

வீட்டில் தொழுவது சிறந்தது
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது அவர்களின் உரிமை. அவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது.
அதே நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொண்டு வீட்டிலேயே தொழுது கொள்வது சிறந்தது. இதனால் பெண்கள் பள்ளிக்குச் செல்வது தவறு என்று எண்ணிவிடக்கூடாது. பள்ளிக்கு வருவதினால் மார்க்க உபதேசங்களை கேட்கும் வாய்ப்பு பெண்களுக்குக் கிடைக்கிறது. சஹாபிய பெண்கள் நபியவர்களின் காலத்தில் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். மார்க்க அறிவை அதன் மூலம் அதிகப்படுத்திக்கொண்டார்கள்.
உங்களது பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை விட்டும் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்குச் சிறந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (480)
பெண் வீட்டின் முற்றத்தில் தொழுவதை விட வீட்டினுள் தொழுவது சிறந்ததாகும். வீட்டினுள் அவள் தொழுவதை விட வீட்டின் உள் அறைக்குள் தொழுவது சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : அபூதாவுத் (483)
ஆண்கள் பள்ளிக்கு வந்து கூட்டுத்தொழுகையில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். பெண்கள் கூட்டுத்தொழுகையில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இதை மேலுள்ள ஹதீஸ்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். கலந்துகொண்டால் தவறில்லை.
குழந்தை அழும்போது விரைவாக தொழுது முடிக்கலாம்
தொழுதுகொண்டிருக்கும் போது குழந்தை அழுதால் விரைவாக தொழுகை முடித்துக்கொள்வதில் தவறில்லை. இதை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்கüன்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமüக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)
நூல் : புகாரி (707)

குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு தொழலாமா?
   
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி ஸைனபுக்கும் - அபுல் ஆஸ் பின் ரபீஆ பின் அப்தி ஷம்ஸ் அவர்களுக்கும் பிறந்த (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் (தமது தோüல்) சுமந்துகொண்டு தொழுதிருக்கிறார்கள். சிரவணக்கம் (சஜ்தா மற்றும் ருகூஉ) செய்யச் செல்லும்போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்; நிலைக்குச் செல்லும்போது (மீண்டும்) உமாமாவை (தமது தோüல்) தூக்கிக்கொள்வார்கள்.
அறிவிப்பவர் : அபூ கத்தாதா (ரலி)
நூல் : புகாரி (516)

ம்ஆத் தொழுவது  பெண்களின் மீது கடமையில்லை.
ம்ஆத் தொழுவது பெண்களின் மீது கடமையில்லை. விரும்பினால் தொழுதுகொள்ளலாம். விரும்பினால் விட்டுவிட்டு வழக்கம் போல் வீட்டிலே லுஹர் தொழுதுகொள்ளலாம்.
பெண்கள் அடிமைகள் நோயாளிகள் சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ம்ஆத் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல் : அபூதாவுத் (901)
நபித்தோழியர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஜம்ஆத் தொழுகையில் கலந்துகொண்டிருக்கிறார்கள். எனவே கலந்துகொள்ளவும் அனுமதியுள்ளது.
நான் வெள்ளிக்கிழமை அன்று "காஃப் வல்குர்ஆனில் மஜீத்' எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலிலி) அவர்களின் சகோதரி
நூல் : முஸ்லிம் (1580)

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?
பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்வதிலும் பெண்கள் மற்ற பெண்களுக்கு இமாமத் செய்வதிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யக்கூடாது என்று ஏராளமான அறிஞர்கள் கூறுகிறார்கள். இவர்களின் கூற்றுத் தான் சரியானது. ஏனென்றால் மார்க்கத்தில் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இருக்க வேண்டும். குறிப்பாக வணக்கவழிபாடுகள் தொடர்பாக ஒரு சட்டத்தைக் கூறும் போது மறைமுகமாக இல்லாமல் தெளிவான அடிப்படையில் ஆதாரம் இருக்க வேண்டும்.
பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா என்ற் பிரச்சனை வணக்கம் தொடர்பானது என்பதால் அதற்கு தெளிவான அடிப்படையில் ஆதாரம் தேவை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்ததாக எந்த ஒரு ஹதீஸையும் இல்லை.
இமாமத் செய்கின்ற விஷயத்தில் ஆண்களுக்குரிய சட்டத்தையே பெண்களுக்கும் கூற இயலாது. ஏனென்றால் தொழுகையில் நிற்கும் போது பெண் இறுதியில் தான் நிற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படி இருக்கும் போது ஆண்களை முந்திக்கொண்டு ஒரு பெண் எப்படி முன்னால் வந்து இமாமத் செய்ய முடியும்,?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(
கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (749)
தொழுகையாளின் கவனத்தை திருப்பும் எந்த ஒரு பொருளையும் பார்வைபடும் விதத்தில் வைக்கக்கூடாது என்று தடை உள்ளது. கண்டிப்பாக பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்க்கு பொருளாக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தொழுக்கூடியவரின் கவனத்தை திருப்பும் எந்தப் பொருளும் வீட்டில் இருப்பது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)
நூல் : அபூதாவுத் (1735)
பெண்களின் குரல் ஆண்களின் கவனத்தை திருப்பிவிடும் என்பதால் நபி (ஸல்) அவர்கள் பெண்கள் தொழுகையில் சப்தமிடுவதற்கு அனுமதி தரவில்லை. மாறாக இமாம் செய்த தவறைச் சுட்டிக்காட்டி அவர்கள் கைதட்ட வேண்டும் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)
நூல் : புகாரி (1203)
எனவே ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யவது கூடாது என்பதே சரியானதாகும்.

பெண்கள் கிரகணத் தொழுகையில் கலந்துகொள்ளலாமா?
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஏற்படும் போது கிரகணம் அகலும் வரை நபி (ஸல்) அவர்கள் பிரத்யேகமாக தொழுதுள்ளார்கள். சூரியன் சந்திரன் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. இந்த மூன்று கோள்களும் ஒன்றையொன்று இழுத்து மோதிவிட்டால் உலகம் அழியும் நிலை ஏற்படும்.
இந்த இக்கட்டான நிலையில் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவதும் தனக்கு பாதுகாப்பை கொடுக்குமாறு கேட்பதும் அவசியமாகிறது. இத்தொழுகையில் பெண்களும் கலந்துகொண்டுள்ளார்கள். எனவே கூட்டாகத் தொழப்படும் இத்தொழுகையில் பெண்கள் கலந்துகொள்வது நபிவழியாகும்.
(
ஒரு முறை) நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலிலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ரலிலி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ரலிலி) அவர்களிடம், "மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?'' என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா (ரலிலி) அவர்கள் வானை நோக்கி (த் தமது தலையால்) சைகை செய்தார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்த) "சுப்ஹானல்லாஹ்' (-அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். அப்போது "(இது மக்களைப் பாதிக்கும்) எதேனும் அடையாளமா?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலிலி) அவர்கள் "ஆம்' என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்றுகொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் கிறக்கமுற்றேன். (கிறக்கம் நீங்க) என் தலை மீது தண்ணீரைத் தெளிக்கலானேன்.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நூல் : புகாரி (86)
 

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்