Social Icons

Sunday 2 December 2012

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா?

கைகளால் காதுகளை மூட வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை.
ஆனால் பிலால் ரலி அவர்கள் பாங்கு சொல்லும் போது அவர்களின் இரு விரல்களயும் இரு காதுகளில் வைத்திருந்ததாக திர்மிதி, அஹ்மத், மற்றும் சில நூல்களில் ஹதீஸ் உள்ளது

பிலால் ரலி அவர்கள் பாங்கு சொல்லும் போது சுற்றுவார். அவரது வாயை அங்கும் இங்குமாகத் திருப்பியதை நான் பார்த்தேன். அவரது இரு விரல்கள் அவரது காதுகளில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தோலால் ஆன சிவப்பு கூடாரத்தில் இருந்தனர் என்று அபூ ஜுஹைஃபா ரலி அறிவிக்கிறார்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் கட்டளைப்படி பிலால் ரலி அவர்கள் காதுகளில் விரலை வைத்தார்கள் என்று இதில் கூறப்படவில்லை. வேறு எந்த ஹதீஸிலும் அப்படி கூறப்படவில்லை.

கையை இப்படித்தான் வைக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததால் எது நமக்கு வசதியோ அப்படி நடந்து கொள்ளலாம். காதுகளை மூடிக் கொண்டால் தான் ஒருவருக்கு ஈடுபாடு வரும் என்றால் அப்படி செய்து கொள்ளலாம்.

பாங்கு சொல்லும் போது எது ஒருவருக்கு இயல்பானதோ அப்படி இருந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்