Social Icons

Sunday 4 November 2012

ஜோதிடன் சொல்வது சில நேரங்களில் நடக்கிறதே?


ஜாதகம் பார்ப்பது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது என இஸ்லாம் கூறுகின்றது ......... மாற்று  மத சகோதரி ஒருவர் ஜாதகம் பார்க்க போன போது அவர்கள் தனக்கு நடந்தது எல்லாவற்றையும் அப்படியே கூறுகின்றார்கள் என கூறுகிறார்..அது எப்படி சாத்தியமாகும் ..ஜோதிடம் உண்மை  என நம்புகிறார் .
எதிர்கால நிகழ்வுகள் அல்லாஹ்விடமே உள்ளன ...... மனிதர்களுடைய செயல்களை ஜோதிடர்களால்  எவ்வாறு கூற முடிகிறது .
மனிதனுக்கு எதிர்காலம் ,கடந்த காலம்  பற்றிய நிகழ்வுகளை அறியும் தன்மை உண்டா ? விளக்கமளிக்கவும்

மனிதர்களால் எதிர்காலத்தைப் பற்றி நாளை என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கையாகும்.
ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்ட சுய சிந்தனையை பயன்படுத்தி இதை ஆய்வு செய்தால் கூட மனிதனுக்கு எதிர்காலத்தைப்பற்றி எந்த அறிவும் இல்லை என்று முடிவுக்கு வந்துவிடலாம்.


இதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி தேவையில்லை. ஜோதிடம் சொல்பவர்களை பார்த்தால் இதை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடக்காரர்கள் வருங்காலத்தைப்பற்றி அறிபவர்களாக இருந்தால் அவர்கள் ஏன் தெருத்தெரு வாக அழைந்து ஜேதிடம் பார்க்கனுமா ஜோதிடம் என்று எதற்கு கத்துகிறார்கள்?
நாளை நம்மிடத்தில் ஜோதிடம் பார்ப்பார்கள் யார் என்பதை முன்பாகவே அறிந்து அவர்களிடத்தில் செல்ல வேண்டியதுதானே?
ஒரு ஜோதிடக்காரனை அழைத்து நாளை உங்களிடத்தில் எத்தனை நபர்கள் ஜோதிடம் பார்ப்பார்கள் என்பதை சொல்ல முடியுமா என்று கேட்டுப்பாருங்கள் துரு துரு என்று முழிப்பார்கள்.
இதுவெல்லாம் நமக்கு எதை காட்டுகிறது என்று சொன்னால் ஜோதிடக்காரன் வúங்காலத்தைப்பற்றி அறிந்து கொள்ளமுடியாது என்று.
இப்போது கேள்வி என்ன வென்றால் அவர்கள் சொல்வது போன்று சில நேரங்களில் நடந்துவிடுகிறதே?
நாம் அறிந்தவரை பெண்கள்தான் ஜோதிடத்தை நாடி செல்கிறார்கள். பெண்கள் ஜோதிடக்காரனிடத்தில் வீட்டில் உள்ள பிரச்சனை அல்லது தனக்குண்டான பிரச்சனைகள் அனைத்தையும் சொல்­விடுகிறார்கள். ஜோதிடக்காரன் இதை அறிந்து கொண்டு பெண்கள் சொன்ன பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளை வக்ஷ்ங்குகிறான். அந்த ஆலோசனைகளின் பிரகாரம் சில நேரங்களில் ஜோதிடக்காரன் சொன்னதை போன்று நடந்து விடுகிறது. இதுதான் காரணம் வேறு எந்த காரணமும் இருக்கமுடியாது.
நீங்கள் கூட உங்கள் தோழிகளுக்கு உங்கள் சகோதரிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை ஆஜ்ôய்ந்து அதற்கு ஆலோசனைகளை சொல்­ப்பாருங்கள் அதில் நீங்கள் சொன்ன ஆலோசனைகளில் ஒன்னு இரண்டு நல்க்கத்தான் செய்யும். அதனால் நீங்கள் வúங்காலத்தைப்பற்றி அறிவீர்கள் என்று வாதிடமுடியாது. இதை உங்கள் சகோதரிக்கு புரிய வையுங்கள்.
மேலும் ஜோதிடம் பொய் என்பதற்கு கீழ்கண்ட சுட்டியை அழுத்தவும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்