Social Icons

Thursday 22 November 2012

ஜனாஸாவில் செய்யக் கூடாதவைகள்

தல்கீன் ஓதுதல்:
ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர். உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார்? எனக் கேட்பார்கள். 

 
அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம் எது? எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு ‘ என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன். ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொடுத்து , அது இறந்தவருக்குக் கேட்டு , அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால் இதை விட உச்ச கட்ட மடமை வேறு என்ன இருக்க முடியும் ? இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும். அடக்கம் செய்து
முடித்தவுடன் அதன் அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு
(மக்களை நோக்கி) ‘ உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது
விசாரிக்கப்படுகிறார் ‘ என்று கூறுவார்கள்.

 அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).
நூல்: அபூ தாவூத்2894 , ஹாகிம் 1 /370 பைஹகீ 4 /56

எனவே மய்யித்திற்குச் சொல்லிக் கொடுக்கும் தல்கீனை ஒழித்துக்கட்டி
அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும்
துஆச் செய்ய வேண்டும். 


பித்அத்கள்:
* மய்யித்துக்கு நகம் வெட்டுதல் ; பல் துலக்குதல்;அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்

* மய்யித்தின் பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்

* மய்யித்தின் வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுதல்

* ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்

* குளிப்பாட்டும் போது மய்யித்தின் நெற்றியில் சந்தனத்தாலோ , அல்லது வேறு நறுமணப் பொருட்களாலோ எதையும் எழுதுதல்

* ஜனாஸா எடுத்துச் செல்லும் போது சில திக்ருகளைக் கூறுதல்

* ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்துதல்

* இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல்

* இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா , ஏழாம் ஃபாத்திஹா ,
நாற்பதாம் ஃபாத்திஹா , கத்தம் , வருட ஃபாத்திஹாக்கள் ஓதுதல்


* இறந்தவருக்காக ஹல்கா , திக்ருகள் , ராத்திபுகள் நடத்துதல்

* இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்

* வெளியூரில் இறந்தவருக்காகத் தொழுகை நடத்துதல்

* கப்ரின் மேல் செடி,கொடிகளை நடுதல்
 

* கப்ரின் மேல் எழுதுதல் ; கல்வெட்டு வைத்தல்

* கப்ருகளைக் கட்டுதல் ; கப்ருகளைப் பூசுதல்

* ஆண்டு முழுவதும் சோகம் அனுஷ்டித்தல்

* சோகத்துக்கு அடையாளமாக கருப்பு ஆடையை அணிதல்

* உடலுக்கு அருகில் விளக்கேற்றி வைத்தல்

* உடலுக்கு அருகில் ரொட்டி போன்ற உணவுகளை வைத்தல்

* இறந்தவர் வருவார் என்ற நம்பிக்கையில் வீட்டின் வாசலில் விடிய விடிய விளக்கு போடுதல்

* அடக்கம் செய்து முடிக்கும் வரை இறந்தவரின் குடும்பத்தார் சாப்பிடாமல்
இருத்தல்


* இறந்தவரின் வீட்டிலிருந்து மாதவிடாய் மற்றும் குளிப்புக் கடமையானவரை வெளியேற்றுதல்

* பூக்கள் மற்றும் மாலைகள்

* உடலுடன் உணவுப் பொருள் கொண்டு சென்று கப்ரில் வினியோகம் செய்தல்

* கப்ரில் பன்னீர் தெளித்தல்

* அடக்கம் செய்தவுடன் இறந்தவரின் உறவினரிடம் முஸாஃபஹா செய்தல்

* அடக்கம் செய்து விட்டு , இறந்தவரின் வீடு வரை வந்து விட்டுச் செல்லுதல்; அங்கு முஸாஃபஹா செய்தல்

* இறந்தவர் விரும்பிச் சாப்பிட்டதை தர்மம் செய்தல்

* இறந்தவருக்காகக் குர்ஆன் ஓதுதல்

* அடக்கம் செய்த மறுநாள் காலையில் கப்ரைப் போய் பார்த்தல்
 

* தனக்காக முன்னரே கப்ரை தயார் செய்தல்

* வெள்ளிக்கிழமை தோறும் பெற்றோர் கப்ரை ஸியாரத் செய்தல்
 

* ஷஃபான் 15 அன்று கப்ருக்குச் செல்லுதல்

* ஷஃபான் 15 அன்று இறந்தவர் பெயரால் உணவு சமைத்தல் பாத்திஹாக்கள் ஓதுதல்

* ஷஃபான் 15 ல் அடக்கத்தலத்தை அலங்காரம் செய்தல்

* இரண்டு பெருநாட்களிலும் கப்ருகளுக்குச் செல்லுதல்

* கப்ரின் முன்னே கைகளைக் கட்டிக் கொண்டு நிற்பது

* திரும்பும் போது கப்ருக்கு முதுகைக் காட்டாமல் திரும்புதல்
இது போன்ற செயல்கள் அனைத்தும் பித்அத்களாகும். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

அல்லாஹ்வும் , அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால்
அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.

பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள்
நாயகம் ( ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடைவோம்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்