Social Icons

Thursday 1 November 2012

தொழுகையில் இமாமை முந்துதல்

மனிதன் இயற்கையிலேயே அவசரக்காரனாவான்.
அல்லாஹ் கூறுகிறான்:
மனிதன் (பொறுமை இழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ

நிதானம் அல்லாஹ்விடத்திலிருந்து உள்ளதாகும். அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ளதாகும். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) நூல்: திர்மிதி 1935)
(இந்த ஹதீஸின் அறிவிப்பு தொடர் பலகீனமானதாகும்)

நமதருகில் நின்று தொழுவோரில் பலர் ருகூவு ஸ{ஜுது மற்றும் தக்பீர்களில் இமாமை முந்திச் செல்கின்றனர். இமாமுக்கு முன்னரே ஸலாம் கொடுத்து விடுகின்றனர். சில சமயங்களில் நாமே இவ்வாறு நடந்துகொள்கிறோம். இதனை நாம் தவறாக நினைப்பதே கிடையாது. ஆனால் நபி(ஸல்)அவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

أَمَا يَخْشَى الَّذِي يَرْفَعُ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يُحَوِّلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ
இமாமுக்கு முன்பே தலையை உயர்த்துபவர் அவரது தலையை கடுதையின் தலையாக அல்லாஹ் மாற்றிவிடுவதை பயந்து கொள்ளவில்லையா? (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 647)

தொடுகைக்காக வருபவரே அமைதியாகவும் நிதானமாகவும் வரவேண்டும் என்ற கட்டளையிருக்கும் போது தொழுகையையே அவசரமாகத் தொழுவது தவறில்லையா?!
இமாமை முந்திச் செல்லக் கூடாது என்பதை தவறாகப் புரிந்து கொண்ட சிலர் இமாமை விட்டும் மிகத் தாமதமாகச் செல்கின்றனர். இதுவும் முறையற்ற செயலாகும். இமாமை பின் தொடரும் முறையை மார்க்க அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். இமாம் தக்பீர் கூறி முடித்தவுடன் அவரை பின்பற்றுபவர் தனது செயல்களை ஆரம்பிக்க வேண்டும். தொழுகையின் அனைத்து நிலைகளிலும் இவ்வாறே பின்பற்றவேண்டும். தக்பீருக்கு முந்தவோ பிந்தவோ கூடாது. இதுவே சரியான முறையாகும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்