Social Icons

Thursday 22 November 2012

வணக்கம் கூறுதல்


ஒருவரையொருவர் சந்திக்கும் போது அழகிய முகமன் கூறி அறிமுகம் செய்து கொள்வதற்கு இஸ்லாம், பொருள் பொதிந்த “அஸ்ஸலாமு அலைக்கும் (தங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக)” என்னும் வாக்கியத்தையும் அதனைக் கேட்டவர் மறுமொழியாக, “வஅலைக்குமுஸ்ஸலாம் (அவ்வாறே தங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக)” என்னும் அற்புத பதிலையும் சொல்லித் தருகிறது.


ஆனால் சிலர் மாற்று மத நண்பர்களைக் கண்டால், “வணக்கம்” என்று சொல்வதைப் பரவலாகக் காண்கிறோம். வணக்கம் என்னும் சொல்லின் பொருள், “நான் உங்களை வணங்குகிறேன்” என்பதாகும். மனிதனை மனிதன் வணங்கலாமா? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகிய லாஇலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவுக்கே முரணானதல்லவா?, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்னும் திருக்கலிமாவை மன, மெய், மொழியால் மனதாரச் சொன்ன ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதனை வணங்குவதாகச் சொல்வது மிகப் பெரிய பாவம் அல்லவா?
நம்மில் பலர் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வணக்கம் என்னும் தமிழ்ச் சொல்லும் ‘நமஸ்காரம்’, ‘நமஸ்தே’ என்னும் வடமொழிச் சொற்களும் கூட ஓர் அந்நிய கலாச்சாரம்தான். இவை அனைத்தும் வணங்குதல் என்னும் அதே பொருளையே தருபவையாகும்.
இந்த அந்நிய கலாச்சாரம் நம்மில் ஊடுருவியதால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த அழகிய இஸ்லாமியக் கலாச்சாத்தைப் புறக்கணித்தவர்களாகி விடுகிறோம் என்பது ஒரு புறமிருக்க, ‘வணக்கம் கூறுதல்’ மனிதனை மனிதன் வணங்கும் ஷிர்க் என்னும் இணைவைத்தலுக்கே கொண்டு போய் சேர்க்கும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் நிறுத்த வேண்டும்.

இஸ்லாமிய சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்து போனதற்கு, அந்நியக் கலாச்சார ஊடுருவல்கூட ஒரு காரணம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம். அந்நியக் கலாச்சாரச்சத்தின் ஊடுருவல் காரணமாகத்தான் நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பல்வேறு காரியங்கள் இஸ்லாத்திற்கு முரணானவையாக இருந்தும், அவற்றை இஸ்லாத்தின் பார்வையில் தவறானவை என்று ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துச் சொல்லியும் ஏற்றுக் கொள்ள பலர் மறுக்கின்றனர்.
இக்கட்டுரையை முடிப்பதற்கு முன் மகத்துவமிக்க மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை மறுபடியும் ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வோம்:
எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் மற்றொரு அறிவிப்பில், அவர்களையே சார்ந்தவர் என கூடுதலாக இன்னொரு வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இறைவன் தனது திருமறையில் இயம்பியவைகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் பொன்மொழிகளில் போதித்தவைகளையும் உள்ளது உள்ளபடி உணர்ந்து, நம்மில் நுழைந்து விட்ட அந்நிய கலாச்சார ஊடுருவல்களைக் கண்டு பிடித்து களையெடுத்தால், அறியாமையால் ஏற்பட்டுப் போன பிரிவுகளும் பிளவுகளும் நீங்கி ஒன்று பட்ட உயரிய சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் திகழும். இன்ஷா அல்லாஹ்.

 


அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவன் நிச்சயமாக -அல்;லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: அபூதாவூத் 2829)

مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ مِنَّا
அமானிதத்தின் மீது சத்தியம் செய்பவன் நம்மைச் சார்ந்தவனல்ல. (அறிவிப்பவர்: அபூபுரைதா(ரலி) நூல்: அபூதாவூத் 2831)
 

 



கஃபாவின் மீதோ  அமானிதம்  கண்ணியம்  உதவி  இன்னாரின் பரகத்  இம்மனிதரின் வாழ்நாள்  நபி(ஸல்)அவர்களின் மேன்மை  அவ்லியாக்களின் கண்ணியம் ஆகியவற்றின் மீதோ  தாய் தந்தையின் மீதோ  குழந்தையின் தலைமீது கை வைத்தோ அல்லது இவையல்லாத இதுபோன்ற முறைகளிலோ சத்தியம் செய்வது ஹராம்ஆகும். இவ்வாறு யாரேனும் சத்தியம் செய்து விட்டால் அதன் பரிகாரமாக லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறவேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللَّاتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
சத்தியம் செய்பவன் தனது சத்தியத்தில் லாத்  உஸ்ஸா(என்ற சிலைகளின் பெயரைக்) கூறினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறிக் கொள்ளட்டும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ 4860)
இது போன்றே ஷிர்க்கான  ஹராமான பல வாசகங்களை முஸ்லிம்களான நம்மில் பலர் பயன்படுத்துகின்றனர். அவற்றில் சில இதோ:
அல்லாஹ்வுடன் பிறரை இணைத்தல்:
1)அல்லாஹ்வைக் கொண்டும் உங்களைக் கொண்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
2)நான் அல்லாஹ்வின் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.
3)இது அல்லாஹ்வின் மூலமும் உங்கள் மூலமும் கிடைத்ததாகும்.
4)எனக்கு அல்லாஹ்வையும் உங்களையும் தவிர வேறு எவருமில்லை.
5)எனக்கு வானத்தில் அல்லாஹ்வும் பூமியில் நீங்களும் இருக்கின்றீர்கள்.
6)அல்லாஹ்வும் இம்மனிதரும் இல்லையெனில்…..
7)நான் இஸ்லாத்தை விட்டும் நீங்கிவிட்டேன்.
8)இயற்கை நாடி விட்டது!

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்