Social Icons

Sunday 4 November 2012

மூன்று நாள், நாற்பது நாள் செல்லலாமா?


மூன்று நாள், நாற்பது நாள் செல்லலாமா? விரிவான விளக்கம் அளிக்கவும்.
இஸ்லாத்தில் ஐந்து கடமைகளுக்கு அடுத்ததாக நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் என்ற பணி முக்கியமானதாகும்.
குர்ஆனில் பல இடங்களில் இந்தக்கருத்தை வ­யுறுத்தி சொல்லப்பட்டுள்ளது.
நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கின்றீர்கள்.


உங்களில் ஒரு கூட்டம் மார்க்கத்தை கற்று பிறகு தன்னுடைய கூட்டத்தாரிடம் எத்திவைப்பவர்கள் இருக்கட்டும்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல் குர்ஆன் 3 : 104

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப் படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். அல் குர்ஆன் 10 : 71
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். அல் குர்ஆன் 31 : 17
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர. அல் குர்ஆன் அத்தியாயம் 103


இந்த வசனங்கள் அனைத்தும் நன்மை ஏவுவது தீமையை தடுப்பது மார்க்க கடமை என்று விவரிக்கிறது.
இதே போன்று தஃவா செய்யும் முறைமைகளை பற்றியும் குர்ஆன் விவரிக்கிறது.
அழகிய உபதேசத்தைக் கொண்டும் மெண்மையான முறையிலும் உனது ரட்சனின் பக்கம் அழைப்பீராக அல் குர்ஆன் 16 : 125
மூஸாவையும் ஹாரூன் அலை அவர்களை அனுப்பி நீங்கள் இருவரும் பிர்அவனிடம்

மென்மையான முறையில் எடுத்துச் செல்வீராக அல் குர்ஆன் 20 : 44
நபியே உமக்கு ஏவப்பட்டதை தெளிவான முறையில் எடுத்துச் சொல்வீராக என்றும் குர்ஆன் (15 : 94) நமக்கு எடுத்துச் சொல்கிறது
அதே தஃவா செய்பவர்களின் எண்ணிக்கை பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகிறது.
பொதுவாக நபிமார்கள் தனித்தனியாக மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள் என்று அறிவோம்.
மூஸா அலை அவர்களும் ஹாரூன் அலை ஆகிய இருவரும் கூட்டாக பிரச்சாரம் செய்தார்கள் என்பதையும் அறிவோம்.
ஆனால் நீங்கள் கேட்ட தப்லீக் ஜமாத் என்பவர்கள் அவர்கள் செய்யக்கூடிய பணி சிறந்த பணியாக இருந்தாலும் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத வழிமுறைகளை நன்மையை ஏவுவதற்கும் தீமையை தடுப்பதற்கும் வைத்திருக்கிறார்கள்.
நன்மையை ஏவுவதற்கு குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான் பேச வேண்டும். முகல்­ம் என்று அழைப்பார்கள்.
பாதையில் ஒரு புரமாக மட்டும்தான் நன்மையை ஏவி கொண்டே செல்வார்கள். மறுபுறம் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளமாட்டார்கள்.
நன்மையை மட்டும்தான் ஏவுவார்கள். தீமையை தóக்கமாட்டார்கள்.
குறிப்பிட்ட நாட்களை மட்டும்தான் அழைப்பு பணி செய்ய வேண்டும் 3 நாட்கள் 15 நாட்கள் 40 நாட்கள் என்று.
இப்படி குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத பல விதிமுறைகளை ஏற்படுத்தி மக்களை அழைக்கிறார்கள்.
முக்கியமாக மக்களை குர்ஆனை சொல்­யும் ஹதீஸையும் அழைக்க வேண்டும். ஆனால் இவர்கள் வேத புத்தகமாக நினைக்கும் அமல்களின் சிறப்புகளை வைத்து அழைப்பார்கள்.
எனவே தப்லீக் இயக்கத்தவர்களுடன் அழைப்பு பணி செய்யாமல் தனித்தனியாக குர்ஆன் ஹதீஸை மக்களிடத்தில் சொல்லலாம்.

நாம் மேலே குறிப்பிட்டவை நன்மையை ஏவும்போது இவர்கள் செய்யக்கூடிய தவறுகளை மட்டும்தான் குறிப்பிட்டுள்ளோம். இன்னும் இவர்கள் மார்க்க ரீதியாக பல தவறுகளை செய்கிறார்கள். அதுதனி செய்திகளாகும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.
                                                                                                                                      -யூசுப் பைஜி

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்