Social Icons

Thursday 4 October 2012

மழை வேண்டும் போது, அளவுக்கு மேல் மழை பெய்தால், மழை பொழியும் போது

  மழை வேண்டும் போது
இரு கைகளையும் உயர்த்தி

அல்லாஹும்மஸ்கினா

அல்லாஹும்மஸ்கினா

அல்லாஹும்மஸ்கினா

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள்:

இறைவா! எங்களுக்கு மழையைத் தா.

ஆதாரம்: புகாரி 1013

அல்லது

அல்லாஹும்ம அகிஸ்னா

அல்லாஹும்ம அகிஸ்னா

அல்லாஹும்ம அகிஸ்னா

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள்:

இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு!

ஆதாரம்: புகாரி 1014

அளவுக்கு மேல் மழை பெய்தால்

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா

என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

இதன் பொருள்:

இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!

ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342

அல்லது

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(இ)லி வல் ஆஜாமி வள்ளிராபி(இ) வல் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி

இதன் பொருள்:

இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும்,
கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.

ஆதாரம்: புகாரி 1013,  1016

அல்லது

அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(இ)லி வல் ஆகாமி வபு(இ)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி

ஆதாரம்: புகாரி 1017

மழை பொழியும் போது

அல்லாஹும்ம ஸய்யிப(இ)ன் நாபி(எ)அன்

இதன் பொருள்:

இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!

ஆதாரம்: புகாரி 1032

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்