Social Icons

Wednesday 17 October 2012

கிரகணத் தொழுகை

    நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்ப்பட்டது. உடனே, நபி صلى الله عليه وسلم அவர்கள் மேலாடை இழுபட(வேகமாக)பள்ளிக்குள் நுழைந்தார்கள் கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்துகள் தொழவித்தார்கள். எவரது மரணத்துக்காகவும் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே அவ்விரு கிரகணங்களையும் காணும் போது தொழுங்கள். உங்களுக்கு ஏற்ப்பட்டது விலகும் வரை துஆச் செய்யுங்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) நூல்:புகாரி
    நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்கு தாயாராகுங்கள்) என்று பிரகடனம் செய்யப்பட்டது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமிர் நூல்:புகாரி, முஸ்லிம்
    பயணத்திலிருந்து வந்ததும் தொழுகை
    அல்லாஹ்வின் தூதர்
صلى الله عليه وسلم அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளி வாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்துகள்  தொழுவார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக்(ரலி) நூல்: புகாரி

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்