Social Icons

Monday 29 October 2012

தொழுகையில் எந்தெந்த இடங்களில் பிரார்த்திக்க வேண்டும்?

தொழுகையில் ஸஜ்தாவிலும், இரண்டாவது மற்றும் நான்காவது ரக்அத்தில் இருப்பில் அமரும் போதும் விரும்பிய பிரார்த்தனையைச் செய்யலாம். இந்த இடங்களில் பிரார்த்திப்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.


'அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 744

'நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) தமக்கு விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: நஸயீ 1151

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்