Social Icons

Monday 29 October 2012

ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். - எது சரி?

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 688, முஸ்லிம் 699


இமாமைப் பின்பற்ற வேண்டும்; இமாமை முந்தக் கூடாது என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இமாமைப் பின்பற்ற வேண்டும் என்றால், இமாம் செய்வதைத் தொடர்ந்து செய்வது தான் பின்பற்றுதல் ஆகும். இமாமுடன் சேர்ந்து செய்வது பின்பற்றுதல் ஆகாது.

எனவே இமாம் ருகூவுக்குச் சென்ற பிறகு, அதாவது அவரைப் பின்தொடர்ந்து நாம் ருகூவுக்குச் செல்ல வேண்டும். இமாமுடன் சேர்ந்து செய்யக் கூடாது.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்