Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 7

 ஒளு (சுத்தம்) பற்றிய நூல்

“ஒளு செய்வதனால் தவறுகள் வெளியேறிவிடும்” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 121

“முஸ்லிமான அல்லது முஃமினான அடியார் ஒளுச்செய்யத் தொடங்கி தனது முகத்தை அவர் கழுவினால் அவரின் முகத்திலிருந்து அவரது கண் மூலமாகச் செய்த ஒவ்வொரு தவறும், அந்தத் தண்ணீருடன் அல்லது அந்தத் தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் வெளியாகிவிடுகிறது. அவரது இரு கரங்களை கழுவினால் அவரது கரங்கள் (பிடித்து) செய்த பாவங்கள் தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் இரு கைகளிலிருந்து வெளிப்பட்டு விடுகிறது. அவர் தனது இரு கால்களைக் கழுவுவாரேயானால் அவ்விரு கால்களும் (எப்பாவத்தைச் செய்ய) நடந்ததோ அப்பாவம் தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசி செட்டுடன் வெளிப்பட்டு விடுகிறது. அவர் பாவங்களிலிருந்து பரிசுத்தமாக வெளிப்படும்வரை” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஒளுவின் போது பல்துலக்குதல் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 122

(இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா) ஓரிரவில் அல்லாஹ்வின் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களோடு இரவு தங்கினார்கள். இரவின் கடைசியில் அல்லாஹ்வின் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து வீட்டிலிருந்து வெளியேறி வானத்தின்பால் நோட்டமிட்டுவிட்டு இம்ரானின் சந்ததியினர் (என்ற) அத்தியாத்தில் “வானங்கள் பூமியைப் படைத்ததிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு அதில் நிச்சயமாக அத்தாட்சிகள் உண்டு” எனும் வசனத்தை நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்பது வரை ஓதிவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி, பல் துலக்கி ஒளுச்செய்து பிறகு எழுந்து (அதன்) பிறகு தொழுதுவிட்டு (அதன்) பிறகு படுத்தனர். அதன்பிறகு எழுந்து வெளியேறி வந்து, வானத்தின்பால் நோட்டமிட்டுவிட்டு இந்த வசனத்தை ஓதினர். அதன்பிறகு ஒருமுறை திரும்பிவந்து பல்துலக்கி ஒளுசெய்து அதன்பின் நின்று தொழுதனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

ஹதீஸ் எண் : 123

“நிச்சயமாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டினுள் நுழைவார்களேயானால் பல்துலக்க ஆரம்பிப்பார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

சுத்தம் மற்றுமுள்ள காரியங்களில் வலது பக்கத்திலிருந்து துவங்குதல் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 124

சுத்தம் செய்யின் அவர்களது சுத்தத்திலும் தலைசீவினால் அவர்களது தலைசீவுவதிலும் செருப்பணிந்தால் செருப்பணிவதிலும் வலப்பக்கத்தையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் உறுதியாக விரும்புவர்களாக இருந்தனர் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளுவின் தன்மை பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 125

அப்துல்லாஹ் பின் ஜைது பின் ஆஸிம் அல் அன்ஸாரீ அவருக்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை இருந்தது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளுவை எங்களுக்கு செய்து காட்டுங்கள் என அவருக்கு கூறப்பட்டது (அதற்கவர்) ஒளு செய்யும் பாத்திரத்தை கொண்டு வருமாறு கேட்டார். (கொண்டு வந்த பிறகு) தனது இரு கைகளில் அதிலிருந்து (ஊற்றி) சாய்ந்து அவ்விரு கைகளையும் மும்முறைக் கழுவினார். பிறகு தனது கையை பாத்திரத்தில் நுழைத்து அதை வெளியில் எடுத்து ஒரே கையில் வாயும் கொப்பளித்து மூக்குக்கு நீரும் செலுத்தினார் அதை மும்முறை செய்தார். பிறகு தனது கையைப் பாத்திரத்தில் நுழைத்து அதை வெளியில் எடுத்து தனது இரு கைகளையும் முழங்கை மொளி வரை இரண்டு இரண்டு முறைக் கழுவினார்.

பிறகு தனது கையை அதில் நுழைத்து அதை வெளியில் எடுத்து தனது தலைக்கு மஸஹு செய்ய ஆரம்பித்து தனத இரு கைகளையும் முன்னோக்கிக் கொண்டு (முன்பகுதியிலிருந்து கொண்டு) சென்று மீண்டும் அதைப் பின்னால் முற்பகுதிவரை கொண்டு வந்தார். அதன்பிறகு கரண்டை மொளிவரை தனது கால்களைக் கழுவினார் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம); அவர்கள் ஒளு இவ்வாறு தான் இருந்தது எனக்கூறினார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜைது பின் ஆஸிம் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு

மூக்கு சிந்துவது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 126

“உங்களில் யாரேனும் ஒளுச்செய்தால் தனது இரு மூக்கு துவாரங்களில் தண்ணீர் செலுத்தி பிறகு அதைச் சிந்தவும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 127

தன் தூக்கத்திலிருந்து உங்களில் ஒருவர் எழுந்தால் மும்முறை மூக்கை சிந்தவும். ஏனெனில் நிச்சயமாக னஷத்தான் அவனது மூக்கின்மேல் கடைசி பாகத்தில் இரவில் தங்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஒளுவை நிறைவாகச் செய்ததன் நிமித்தம் நெற்றி, கைகால்களிலிருந்து ஒளி பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 128

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை ஒளுச் செய்ய நான் கண்டேன். அவர் தன் முகத்தைக் கழுவி ஒளுவை நிறைவாகச் செய்தனர். அதன்பிறகு அவரது வலக்கரத்தையும் புஜத்தையும் சேர்த்துக்கழுவினார். அதன்பிறகு தனது இடக்கரத்தையும், புஜத்தையும் சேர்த்துக்கழுவினார். பிறகு தலையை(மஸஹு) தடவினார்கள். இதன்பிறகு வலதுகாலை கெண்டைக்கால்வரை சேர்த்துக்கழுவினர், அதன்பிறகு இடதுகாலை கெண்டைக்கால்வரை சேர்த்துக்கழுவினார். அதன்பிறகு என்னைப்பார்த்து இவ்வாறு தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை ஒளுச் செய்ய நான் கண்டேன் எனக் கூறினர். அதன்பிறகு “ஒளுவை நிறைவாக செய்ததன் காரணமாக நீங்கள் (தான்) முகங்களில், கைகளில், கால்களில் பிரகாசத்தை உடையவர்கள்” உங்களில் யாருக்கேனும் இயலுமானால் அவரது பிரகாசத்தை தனது முகத்தில், கைகளில், கால்களில் நீண்டதாக ஆக்கி கொள்ளவும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர்: நுஜம் பின் அப்துல்லாஹ் அல்முஜ்மிர் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: குதிரையின் நெற்றி, அதன் கைகள் கால்களில் காணப்படும் வெண்மையை குறிக்கவே குர்ரத் தஹ்ஜில் எனும் வார்த்தை உபயோகமாகிறது. ஒளுவை நிறைவாய் செய்வதானால் ஒளுவின் உறுப்புகள் மறுமை நாளில் ஒளி பெற்று திகழும். குறிப்பாக முகம், கைகள், கால்கள் ஆகியவைகளாகும்.

ஹதீஸ் எண் : 129

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்,அடக்கஸ்தலத்திற்கு வந்து; அஸ்ஸலாமு அலைக்கும் தாரகவ்மின் முஃமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹ் பி(க்)கும் லாஹிகூன்.

பொருள்: முஃமீனான கூட்டத்தாரின் வீடே! உங்களின் மீது சாந்தி உண்டாவதாக! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடிவிட்டபோது உங்களுடன் வந்து சேரக்கூடியவர்களாக இருக்கிறோம் என்று கூறினார்கள். நான் நமது சகோதரர்களை பார்க்க வேண்டுமென விரும்புகிறேன் (அதைக்கேட்ட ஸஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! நாங்கள் உங்களின் சகோதரர்கள் அல்லவா? எனக் கேட்டனர். மாறாக நீங்கள் எனது தோழர்கள் மேலும் நமது சகோதரர்கள் என்பவர்கள் இதுவரை அவர்கள் வரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு (ஸஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! இதுவரை வராத உங்கள் சமூகத்தவர்களை எவ்வாறு நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்? என்றனர். அதற்கு அவர்கள் “நெற்றியிலும், கால்களிலும் வெள்ளை நிறமுள்ள ஒரு குதிரை ஒரு மனிதருக்கு இருந்தது. கருப்பு நிறமுள்ள (வேறு நிறமே கலக்காத) குதிரைக்கு மத்தியில் வேறு நிறமிருப்பின் அவரது குதிரையை அவர் தெரிந்து கொள்வாரல்லவா? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! என்றனர். (ஆகவே) நிச்சயமாக அவர்கள் மறுமைநாளில் ஒளு செய்யப்பட்ட உறுப்புகள் அனைத்தும் ஒளி உடையதாக இருக்க வருவார்கள். ஹவ்ளுல் கவ்தரில் (ஹவ்ளுல் கவ்தர் என்பது மஹ்ஷரில் உள்ள ஒரு தடாகமாகும்) அவர்களுக்கு முன்னபாக நான் இருப்பேன். (எனது) நீர் தடாகத்தில் தண்ணீர் அருந்துவதிலிருந்து சில ஆடவர்கள், வழிதவறிய கால்நடைகள் துரத்தப்படுவது போன்று துரத்தப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள(;ளுங்கள்) என் பக்கம் தண்ணீர் அருந்த வாருங்கள் என நான் அவர்களை அழைப்பேன் (அப்போது) என்னைப்பார்த்து, “நிச்சயமாக உமக்கு பிறகு (மார்க்கத்தை) அவர்கள் மாற்றிவிட்டார்கள் என எனக்கு கூறப்படும். (அப்போது) நான் தூரம், தூரம் (தூரமாக செல்லுங்கள்) என நான் கூறுவேன்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஒளுவை அழகாக செய்தவர் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 130

உஸ்மான் பின் அப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒளுச் செய்வதற்காக தண்ணீர் கொண்டு வரச்சொல்லி ஒளு செய்தார்கள். தங்களது முன் கையை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்குக்கு நீரும் செலுத்தி அதைச் சிந்தினார்கள். அதன்பிறகு தன் முகத்தை மும்முறை கழுவினார்கள். அதன்பிறகு தன் வலக்கரத்தை முழங்கைவரை மும்முறை கழுவினார்கள். அதன்பிறகு தன் இடக்கரத்தையும் அதைப்போன்றே கழுவினார்கள். அதன்பின்னர் தனது தலைக்கு மஸ்ஹு செய்தார்கள். அதன்பிறகு கரண்டைக்கால் வரை மும்முறை தனது வலது காலை கழுவினார்கள். அதன்பிறகு இடதுவை(காலை)யும் அதே போலவே கழுவினார்கள். அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய இந்த ஒளுவைப்போன்றுதான் ஒளுச்செய்ய நான் கண்டேன் எனக்கூறினார்கள். அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், யார் எனது இந்த ஒளுவைப்போன்று ஒளுச் செய்துவிட்டு அதன்பிறகு தொழுகத்தயாராகி, இரு ரக் அத்துக்கள் தொழுக ஆரம்பித்து அவ்விரு ரக் அத்திலும் தன்னேடு1 பேசாமல் யார் தொழுகிறாரோ அவரது முந்திய பாவம் மன்னிக்கப்படுகிறது எனக்கூறினார்கள்.

இந்த ஒளுதான் ஒருவர் தொழுகை;காக நிறைவாகச் செய்யும் ஒளுவாகும் என நமது அறிஞர்கள் கூறுகிறார்கள் என இப்னு ஷிஹாப் கூறுகிறார்.

அறிவிப்பவர்: உதுமான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் உரிமை எழுதப்பட்ட அடிமை ஹும்ரான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்.

குறிப்பு: பிற ஊசலாட்டங்கள் பிற எண்ணங்களின்றி தொழுகையை முழு கவனத்துடன் நிறைவேற்றுவதே இதன் பொருளாகும்.

ஹதீஸ் எண் : 131

அல்லாஹ் கட்டளையிட்டதைப்போன்று யார் ஒளுவை நிறைவாகச் செய்கிறாரோ (அது) அவர் கடமையாக்கப்பட்ட தொழுகை(கள் அத்தொழுகை)களுக்கு மத்தியில் (செய்த சிறுபாவங்களுக்கு) பரிகாரமாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் என உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்

அறிவிப்பவர்: ஹும்ரான் ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 132

தொழுகைக்காக ஒருவர் ஒளுச்செய்து அந்த ஒளுவை நிறைவாகச் செய்துவிட்டு, கடமையான தொழுகையை நிறைவேற்ற, அவர் நடந்து சென்று, அத்தொழுகையை ஜனங்களுடன் அல்லது ஜமாத்தோடு அல்லது பள்ளியில் நிறைவேற்றிவிடின் அவரது பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்கிறான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றேன் என உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

(கடுங்குளிர், நோய் போன்ற) கஷ்டமான நேரங்களில் ஒளுவை பரிபூரணமாகச் செய்தல் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 133

எதைச் செய்வதனால் அல்லாஹ் அதன்மூலம் தவறுகளை அழித்துவிடுகிறானோ எதன்மூலம் பதவிகளை உயர்த்திவைக்கிறானோ அதைப்பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக்கேட்டார்கள். அதைக்கேட்ட அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஆம்” (சொல்லுங்கள்) எனக்கூறினார்.

(கடுங்குளிர், உடல்வலி இதுபோன்ற) கஷ்டமான நிலைகளில் ஒளுவை நிறைவாகச் செய்வதாகும். மஸ்ஜிதுகளின்பால் செல்ல அதிகமான (எட்டுக்களைக் கொண்டு) தூரம் நடத்தல் ஒரு தொழுகைக்குப் பிறகு (மறு) தொழுகையை எதிர்பார்த்தல் (வணக்கத்திற்கெனவே தம்மை ஒதுக்கி வைத்திருக்கும் இச்செயலே) உங்களுக்கு ரபாத் ஆகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஒளு எத்திய அளவிற்கு நகை அணிவிப்பு (உண்டு) எத்தும் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 134

அபூஹுரைரா அவர்கள் தொழுகைக்காக ஒளுச் செய்யும்போது அவருக்குப்பின்னால் நான் (அறிவிப்பவர்) இருந்தேன். அவர் தமது கரத்தை (கழுவும்போது) அக்குள் வரை நீட்டி(கழுவி)னார். அப்போது அவரிடம் அபூஹுரைராவே! இது என்ன ஒளு என்றேன். “இபுறாஹீம் அலைஹுஸ்ஸலாம் அவர்களின் மகனாரே! நீங்கள் இங்கு இருக்கிறீர்களா? நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெரிந்திருந்தால் இந்த ஒளுவை நான் செய்திருக்க மாட்டேன் ஒளு(வின் அடையாளங்கள்) எதுவரை எத்தி(உள்ள)யதோ அதுவரை விசுவாசிக்கு நகை அணிவிப்பு (மறுமையில்) எத்தும் (கிடைக்கும்) என எனது உற்ற நண்பர் சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹாஜிம் ரளியல்லாஹு அன்ஹு

ஒளுவின் இடங்களில் எதையேனும் (கழுவாது) விட்டுவிட்டால் அதைக் கழுவுதல் - ஒளுவைத் திரும்பச் செய்தல் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 135

“ஒரு மனிதர் ஒளுச்செய்து தனது பாதத்தில் நகத்தளவு (கழுவாது) விட்டுவிட்டார். நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அதைப்பாhத்து விட்டு “திரும்பச் சென்று உமது ஒளுவை அழகாகச் செய்வீராக!” எனக்கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று (ஒளுச்செய்து விட்டு) பிறகு தொழுதார் என உமர் பின் கத்தாபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்கறிவிக்கிறார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

ஒளுவிற்கும் குளிப்பதற்கும் எவ்வளவு தண்ணீர் தேவை என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 136

ஒரு ‘முத்தி‘ல் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளுச்செய்யக்கூடியவர்களாகவும் ஒரு ‘ஸாஃஉ‘ விலிருந்து ஜந்து முத்துகள் வரை குளிக்ககூடியவர்களாகவும் இருந்தனர் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு: ஒரு ‘முத்து‘ என்பது இருகைகளின் கொள்ளவு. ஒரு ‘ஸாஃஉ‘ என்பது நான்கு ‘முத்து‘ களாகும்

காலுறைகள் மீது தடவுவது (மஸ்ஹு செய்வது) பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 136(டி)

ஜரீர் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டு பிறகு ஒளுச்செய்தார் தனது காலுறைகளின் மீது மஸ்ஹும் செய்தார். இவ்வாறு செய்கிறீரே என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ஆம், “நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், சிறுநீர் கழித்துவிட்டு அதன்பிறகு ஒளுவும் செய்து தங்களது இரு காலுறைகள் மீதும் மஸ்ஹு செய்த(தடவிக் கொண்ட)னர் என்பதை நான் கண்டேன் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹம்மாம் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: “ஸஹாபாக்களில் இந்த ஹதீஸைக் கேட்பவர்களுக்கு இது அதிசயமாக இருந்தது ஏனெனில் இஸ்லாத்தை ஏற்றது ‘அல்மாயிதா‘ அத்தியாயம் இறங்கிய பிறகாகும்” என இபுறாஹும் கூறியதாக அஉமஷ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஹதீஸ் எண் : 137

அபுமூஸா அவர்கள் சிறுநீர் விஷயத்தில் கடினமானவராக இருந்தார். பாட்டிலில் சிறுநீர் கழிக்க கூடியவராகவும் இருந்தாh. பனூ இஸ்ரவேலர்கள் அவர்களின் தோலில் (உடம்பில்) சிறுநீர்பட்டுவிட்டால் கத்திரிக்கோல்களினால் அதை (அந்த இடத்தை) கத்திரிக்க கூடியவர்களாக இருந்தனர் எனவும் கூறிக்கொண்டிருந்தார்.

உங்களது இந்தக் தோழர் இவ்வாறு கடினம் காட்டாமல் இருப்பதை நான் நிச்சயமாக விரும்புகிறேன் என ஹுதைபா கூறினார். “நானும் அல்லாஹ்வின் தூதரும் நடந்து கொண்டிருந்தோம். ஒரு சாராரின் குப்பைமேட்டுக்கு, சுவற்றுக்கு அப்பால் வந்தார்கள். உங்களில் ஒருவர் நிற்பதைப்போன்று நின்று சிறுநீர் கழித்தார்கள். அவர்களை விட்டும் நான் விலகி நின்றேன். என்பால் எனக்கு சைக்கினை செய்தனர். அவர்கள் சிறுநீர் கழித்துமுடியும் வரை அவர்களுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தேன் என்றார்.

மற்றொரு அறிவிப்பில் (அதன்பிறகு) “ஒளுவும் செய்து தங்களது காலுறைகளுக்கும் மஸ்ஹு செய்தார்கள்” என உள்ளது.

அறிவிப்பவர்: அபூவாயில் ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 138

நான் இரவு நேரத்தில் ஒரு தொலைதூர(ப்பயணத்)தில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். உன்னுடன் தண்ணீர் இருக்கிறதா? என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர். நான் ஆம்! என்றேன். தங்களது வாகனத்திலிருந்து கீழே இறங்கி இருட்டில் மறையும்வரை நடந்தார்கள். அதன்பிறகு வந்து பாத்திரத்திலிருந்த தண்ணீரை அவர்களுக்கு ஊற்றினேன் அவர்களது முகத்தைக் கழுவினார்கள். அப்போது அவர்களின்மேல் உல்லன் ஜுப்பா இருந்தது. அவர்களது முன்கையை அதிலிருந்து வெளியாக்க முடியாமல் (இறுக்கமாக) இருந்தது. (பின்னர்) ஜுப்பாவின் கீழ்பகுதியிலிருந்து வெளியாக்கி (இரு கொடங்கைகளையும் முழங்கைவரை) கழுவினார்கள் அவர்களின் தலைக்கு மஸ்ஹு செய்தார்கள் அதன்பிறகு அவர்களது இரு காலுறைகளை நான் கழற்ற (முயன்றேன்) நாடினேன். அவ்விரண்டையும் விட்டுவிடு. நிச்சயமாக அவ்விரண்டையும் நான் சுத்தமானவைகளாகவே நுழைத்தேன் எனக்கூறி அவ்விரண்டின் மீதும் மஸ்ஹு செய்தார்கள்.

அறிவிப்பவர்: முகீராபின் ஷுஃபாரளியல்லாஹு அன்ஹு

காலுறைகளுக்கு மஸ்ஹு செய்வதில் காலவரம்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 139

காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது பற்றி கேட்பதற்காக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் வந்தேன். அதற்கவர்கள் “அபூதாலிபின் மகனாரைப்பிடித்து கேளுங்கள் ஏனெனில் அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் பிராயாணத்தில் (இருப்பவராக) இருந்தனர்” என்றனர். ஆகவே அவரிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர் “மூன்று பகல் மூன்று இரவுகள் பிரயாணத்தில் (இருப்பவருக்கும்) ஒரு பகல் ஒரு இரவு பிரயாணி அல்லாதவருக்கும் (காலக்கெடு) ஆக்கியுள்ளனர்” எனக்கூறினார்.

அறிவிப்பவர்: ஷுரைஹ் பின் ஹானீ ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 140

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (தொழுகைக்கு) பிந்திவிட்டார்கள். அவர்களுடன் நானும் பிந்திவிட்டேன். அவர்களது தேவையை முடித்துக் கொண்டபின் உன்னிடம் தண்ணீர் இருக்கிறதா? எனக்கேட்டனர். (ஒளு செய்வதற்குரிய) சுத்தமான தண்ணீரை அவர்களுக்கு கொண்டு வந்தேன். அவர்களது கைகளையும், முகத்தையும் கழுவினர். தங்களது முன்கையை (ஜுப்பாவை விட்டும்) வெளியே எடுக்கப் போனார்கள் ஜுப்பாவில் கைகள் இருக்கமாக இருந்தது. ஆகவே ஜுப்பாவிற்கு கீழிருந்து தங்களது கையை வெளிப்படுத்தி, ஜுப்பாவின் ஓரத்தை தமது தோள் புஜங்களின் மீது போட்டுக்கொண்டு தங்களது இரு முன்கைகளையும் (முழங்கை வரை) கழுவினார்கள். தங்களது தலையின் முன்பகுதியின் மீதும், தலைப்பாகை மீதும், இரு காலுறைகளின் மீதும் மஸஹு செய்தனர். அதன்பிறகு அவர்களும் (தொழுமிடத்திற்கு) வருவதற்காக ஏறினார். நானும் ஏறினேன். சமூகத்தவர்களின் பால் முடிவாக வந்தோம். அவர்கள் தொழுது கொண்டிருந்தனர். அவர்களுக்கு அப்துற்றஹ்மான் பின் அவ்ஃப் தொழுகை நடத்திக்கொண்டிருந்தார். நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் (வருகையை) உணர்ந்ததும் அங்கிருந்து நகர்ந்து கொள்ளப்போனார். நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு சைக்கினை செய்தார்கள். (மீதத் தொழுகையையும்) அவர்களுக்கு அவரே தொழவைத்தார். அவர் ஸலாம் கொடுத்ததும் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்தார்கள் நானும் எழுந்தேன் எங்களுக்கு முந்திவிட்ட ஒரு ரக்அத்தைத் தொழுதோம்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா ரளியல்லாஹு அன்ஹு

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்