Social Icons

Monday 29 October 2012

புகாரியில் 799வது ஹதீஸில் ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் துஆவை தொழுகையில் ஓதலாமா ?

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிருந்து தலையை உயர்த்திய போது ஸமி அல்லாஹு மன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள்.அவர்களுக்குப் பின்னாருந்த ஒரு மனிதர் ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்) என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், (இவ்வாறு) கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான் தான் என்றார். முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதை நம்மில் முதல் பதிவு செய்வது யார் என போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 799)

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்