Social Icons

Sunday 21 October 2012

பால்குடிச் சட்டங்கள் பற்றி ஸஹீஹ் புகாரியில் வந்த ஹதீஸ்கள்

2:233   وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ  ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ الرَّضَاعَةَ ۚ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ ۚ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَّهُ بِوَلَدِهِ ۚ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ ۗ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗ وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّا آتَيْتُم بِالْمَعْرُوفِ ۗ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

2:233. (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
4:23   حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُم مِّن نِّسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
65:6   أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنتُم مِّن وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ ۚ وَإِن كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنفِقُوا عَلَيْهِنَّ حَتَّىٰ يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ  ۖ وَأْتَمِرُوا بَيْنَكُم بِمَعْرُوفٍ  ۖ وَإِن تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَىٰ
65:6. உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
   மேலும் பால்குடிச் சட்டம் குறித்தவிமர்சனம் 

பால்குடிச் சட்டம் குறித்த ஸாலிம் ஹதீஸ் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க மறுத்து விரண்டு ஓடும் சிலர் தொடர்ந்து விமர்சித்து வருவதால் பால் குடி சம்பந்தமாக சவூதியில் வெளியிடப்பட்ட பத்வாவினால் ஏற்பட்ட விளைவினைப் பற்றி ஏகத்துவம் ஆசிரியர் அறிஞர் ஷம்சுல் லுஹா அவர்கள் தீட்டிய ஆசிரியர் தலையங்கத்தை இந்தச் சமயத்தில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம். ஸாலிம் ஹதீஸ் தொடர்பான மறுப்பை தனிக்கட்டுரையில் காண்க. ஆசிரியர்
 
சவூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று மறுத்து வருகின்றனர். அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
1. ஹிஜாபைக் களைந்து விடும். கார் ஓட்டும் போது முகத்தைக் காட்ட வேண்டும். இது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் பிறப்பிடம் ஆகும்.
2. பெண்களிடம் வெட்கம் எடுபட்டு விடும்.
3. அடிக்கடி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவர்.
4. பெண்களிடம் பிடிவாதம் தலைதூக்கும். வீட்டை விட்டு அற்பக் காரணங்களுக்காகக் கூட வெளியேறி விடுவார்கள்.
5. சிக்னல், பெட்ரோல் பங்க், சோதனைச் சாவடி போன்றவற்றில் நிற்பது, விபத்து, போக்குவரத்து விதி மீறலுக்காக காவல்துறையினரிடம் மாட்டுதல் போன்ற நிலை ஏற்படும்.
6. சாலைகளில் நெருக்கடி மேலும் அதிகமாகும்.
7. விலைவாசி உயர்வுää கடன் போன்ற சுமைகள் அதிகரிக்கும்.
8. ஆண்களிடம் உள்ள நிதானம், தூர நோக்கு பெண்களிடம் இருக்காது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும்.
9. பெண்களின் குற்றங்கள் அதிகரிப்பதால் அவர்களைக் கண்காணிக்க பெண் காவல் துறை உருவாக்க வேண்டும். பெண் காவலர்களும் முகத்தைக் காட்டியாக வேண்டும்.
10. பெண்களுக்கென்று கார் ஒர்க் ஷாப், வாடகைக் கார் மையம் போன்றவை அமைக்க வேண்டும். இதற்கென பணிப் பெண்களை நியமிக்க வேண்டும். பெண்கள் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தால் குழப்பங்கள் தோன்ற ஆரம்பித்து விடும். மேற்கத்திய நாடுகளைப் போன்று வீட்டு நலம், குழந்தைகள் நலம் அனைத்தும் பாழாகி விடும்.
11. கணவன் அல்லது பெற்றோர் இருக்கும் போதே தவறுகள் நடக்கின்றன. அதுவும் ஒழுக்கமிக்க பெண்களுக்கே இவ்வாறு நடக்கின்றது. ஒழுக்கக்கேடான பெண்ணாக இருந்து அவள் வெளியே புறப்பட்டால் அதைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
12. தூரமான இடங்களில் கார் பழுதாகி விட்டால் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
13. ஒரு பெண், திருமணம் முடிக்கத் தடையான ஆண் துணையின்றி பயணம் மேற்கொள்வது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு எதிரானது.
இவை அனைத்தும் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினால் ஏற்படும் குழப்பங்கள் என்று ச

வூதி மார்க்க அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துக்களாகும்.
இதற்கு இவர்கள் தரும் தீர்வு வெளிநாடுகளிலிருந்து ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.
அவ்வாறு அமர்த்துகின்ற போது இதை விட அதிகமான பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அந்த டிரைவர்கள், பெண்களைத் தனியாகவே அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. சதாவும் நெருங்கிப் பழக வேண்டியுள்ளது. குடும்பத்தினர் அனைவருடனும் டிரைவர் சர்வ சாதாரணமாகக் கலக்க வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வு என்ன?
அந்த டிரைவர்களுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்து விட வேண்டும் என்று அண்மையில் ஒரு சவூதி மார்க்க அறிஞர் தீர்ப்பளித்திருக்கின்றார்.
சவூதியின் மூத்த அறிஞர்கள் குழு உறுப்பினரும் மன்னரின் ஆலோசகருமான ஷேக் அப்துல் முஹ்சின் பின் நாசர் அல் உபைக் கான் என்பவர் தான் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
இதற்கு ஆதாரமாக முஸ்லிம் நூலில் இடம் பெறும் ஸாலிமுடைய ஹதீஸை உபைக் கான் கொண்டு வந்திருக்கிறார். (இந்த ஹதீஸ் குறித்த விளக்கத்தை கண்ட பாவனையில் கொண்டை முடிக்கும் இஸ்மாயில் ஸலபி என்ற விமர்சினக் கட்டுரையில் காண்க!)
இப்படி ஒரு மார்க்கத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில், சவூதியிலும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் இதற்குப் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பி விட்டன.
இந்தப் பால்குடிச் சட்டம் பரிகாசத்திற்கும், பழிப்பிற்கும் உள்ளாகியிருக்கின்றது. இந்தச் சட்டம் கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் மாறியிருக்கின்றது.
பச்சை மழலைகளின் பசி உணர்வைத் தீர்க்கின்ற பால்குடிச் சட்டம், பருவ வயதை அடைந்தவரின் பாலுணர்வுக்குப் பாதை மாற்றப்படுகின்றது என்ற அபாயத்தைப் பாமர மக்கள் இன்று புரியத் துவங்கியிருக்கிறார்கள்.
தாடி வைத்த டிரைவர்கள், தாய்மார்களிடம் பால் கொடுக்குமாறு கேட்கும் கேலிச் சித்திரங்கள் இணைய தளங்களில் வெளியாகின்றன.
சவூதி மற்றும் அரபகத்திலுள்ள பெண்கள் கொதித்துப் போயுள்ளனர். இது தொடர்பாக கல்ஃப் நியூஸ் மற்றும் சில அரபு மொழிப் பத்திரிகைகளில் அப்பெண்கள் அளித்துள்ள பேட்டிகள் இதோ:
“இந்த மார்க்கத் தீர்ப்பு கிண்டலும் கேலிக்கூத்துமாகும். எங்கள் மார்பகங்களை வெளிநாட்டு ஓட்டுனர்களுக்கு அளிக்க வேண்டுமாம்! இது தான் எங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பா?” என்று ஃபாத்திமா அஷ்ஷம்மாரி என்ற பெண் குமுறுகின்றார்.
தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு சவூ திப் பெண்மணி “கார் ஓட்டுவதை இஸ்லாம் எனக்குத் தடை செய்து விட்டு எனது மார்பகத்தை அந்நியரிடம் பகிர்ந்து கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கிறதோ?” என்று கேள்வி எழுப்புகின்றார்.
“எனக்குப் பிறந்த, வயதுக்கு வந்த என் சொந்தப் பிள்ளைகளுக்கு நான் பால் கொடுக்காத போது பிற நாட்டு ஆடவர்களுக்கு நான் பால் கொடுக்க வேண்டுமோ? இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என்று அவர் மேலும் கேட்கின்றார்.
“வீட்டில் பணி புரியும் பணிப் பெண்கள், எங்கள் கணவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு இந்த ஃபத்வா பொருந்துமா? இவ்வாறு பால் கொடுப்பதன் மூலம் அனைவருமே சகோதர, சகோதரிகளாக ஆகிவிடலாம் அல்லவா?” இது இன்னொரு பெண் எழுப்புகின்ற வித்தியாசமான கேள்வி!
ஒரு பெண் ஆசிரியையிடம் அவரது டிரைவர், “எனக்குப் பால் புகட்டுங்கள்’ என்று கேட்கின்றார். ஆசிரியை தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியதும், “நான் உங்கள் மகனாக விரும்புகிறேன்’ என்று அந்த ஓட்டுனர் பதிலளித்து சாமாளிக்கிறார்.
இவ்வாறு தன் மனைவி சந்தித்த ஒரு மோசமான அனுபவத்தை அவரது கணவர் ஹமீத் அலீ தெரிவிக்கின்றார்.
“தாய்மார்கள் ஓட்டுனர்களுக்குத் தங்கள் கணவன் முன்னிலையில் பாலூட்ட வேண்டுமா? அல்லது தனியாகப் பாலூட்ட வேண்டுமா? ஓட்டுனருக்குப் பாலூட்டும் போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் கணவன் நுழைந்து விட்டால் கணவனின் கோரத் தாக்குதலிலிருந்து மனைவியை யார் காப்பாற்றுவார்?” என்று சவூதிப் பெண் எழுத்தாளர் ஒருவர் குத்தலாகக் கேள்விகளைத் தொடுக்கின்றார்.
06.06.2010 மற்றும் 20.06.2010 ஆகிய தேதிகளில் வெளியான அரபுப் பத்திரிகைகளில் மேற்கண்ட பேட்டிகள் வெளியாகியுள்ளன.
அந்த அளவுக்கு இந்த மார்க்கத் தீர்ப்பு படு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தச் சமயத்தில் தான் ஸாலிமின் ஹதீஸ் பற்றிய பார்வைகள் கண்ணோட்டங்கள், கருத்தோட்டங்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. இந்தச் சட்டத்தை மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியாத சவூதி மார்க்க அறிஞர்கள், இந்த ஹதீஸ் அபூஹுதைபாவின் மனைவி ஸஹ்லாவுக்கு மட்டும் உரிய தனிச் சட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.
ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ், ஷைக் ஸாலிஹ் பின் பவ்ஸான் போன்ற அறிஞர்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இது தொடர்பாக மற்றொரு கருத்தும் வெளியாகியுள்ளது.
“ஸாலிமின் ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியிருக்கின்றது. எனினும், அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த ஒவ்வொரு ஹதீசும் அதன் கருத்து சரியாக அமைந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது”
இவ்வாறு சவ10த் பின் அப்துல்லாஹ் அல் குனைஸான் என்ற அறிஞர் இந்த ஹதீஸ் பற்றித் தெரிவிக்கின்றார்.
இந்த நிலைப்பாட்டைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டிருக்கின்றது. பி.ஜே. என்ற ஒரு தனி மனிதரின் மீது கொண்ட வெறுப்பு காரணமாக நமது நிலைப்பாட்டைக் குறை கூறும் ஸலபிகள், உமரிகள், மதனிகள் போன்றோர் அரபு நாட்டு மார்க்க அறிஞர்களின் இந்த நிலைப்பாட்டில் குறை காண்பார்களா? இந்த மார்க்க அறிஞர்களுடன் விவாதம் செய்வார்களா? இவர்களுக்கு எதிராக இணைய தளத்திலும்,பத்திரிகைகளிலும்,பிரச்சாரங்களிலும் போர்க்கொடி தூக்குவார்களா? ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரபு நாட்டு அறிஞர்கள்.
பி.ஜே. சொன்னால் தான் தப்பு. அரபு நாட்டுக்காரன் சொன்னால் தப்பில்லை என்பது தான் இவர்களது கொள்கை. இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஹதீஸின் கருத்து குர்ஆனுடன் மோதாமல் இருக்க வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டை அறிவித்ததால் தான் இந்த ஜமாஅத் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஹதீஸை மறுப்பவர்கள் என்ற முத்திரையும் இதன் மீது குத்தப்படுகின்றது. இதற்கெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்குர்ஆன் 35:28

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்