Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 18

 தொழுகை பற்றிய நூல்

ஃபஜ்ரின் இரண்டு ரக்அத்து (தொழுகை)க்குப் பிறகு படுத்து (உருளுதல்) எழுதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 361

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஐரின் இரண்டு ரக்அத்தை தொழுதுவிடுவார்களாயின் நான் விழித்திருந்தால் என்னோடு பேசிக்கொண்டிருப்பார்கள். இல்லையெனில் விலாப்பக்கம் படுத்துப் புரளுவார்கள் என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஃபஐரு தொழுகைக்குப் பிறகு தொழுத இடத்தில் அமருதல் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 362

ஸம்மாக் பின் ஹர்ப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். நான் ஐபர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நீர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் உட்காரக்கூடியவராக இருந்தீரா? எனக் கேட்டேன்.

(அதற்கு) ஆம்இஅதிகமாக எந்த முஸல்லாவில் (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுப்கைத் தொழுகிறார்களோ அல்லது காலைத் தொழுகையைத் தொழுகிறார்களோ அதிலிருந்து சூரியன் உதயமாகும் வரை எழுந்திருக்க மாட்டார்கள். சூரியன் உதயமாகி விட்டால் எழுந்து விடுவார்கள். (ஸஹாபாக்கள் ரளியல்லாஹு அன்ஹும் அஐ;மஈன்) அறியாமைக்கால காரியங்களை அதுபற்றி பேசி சிரித்து கொண்டிருப்பார்கள். (அதை கேட்கும் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) புன்முறுவல் பூக்க சிரி(ப்பார்)த்தார்கள் என்று கூறுகிறார்.

’ளுஹாத்’ தொழுகை பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 363

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைஇ ளுகாத் தொழுகையை அறவே (நேமமாக) தொழுக நான் கண்டதில்லை (ஆயினும்) அத்தொழுகையை உறுதியாகவே தொழுகிறேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு சில) செயல்களை செய்ய விருப்பட்டவர்களாக இருக்கவே (அவ்வாறுஇருப்பினும்) (செய்யாது) விட்டுவிடுவார்கள் (காரணம்) அதை ஐனங்கள் எடுத்து (வேகமாகச்) செயல்பட்டு (அதன்காரணமாக) அது (இறைவனால்) கடமையாக்கப்பட்டு விடுமோ என அஞ்சியதால் தான் என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

’ளுஹாத’ தொழுகை’ இரண்டு ரக அத்துகள் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 364

உங்களில் ஒவ்வொருவரின் உடம்பிலுள்ள அனைத்து எலும்புகள்இ அதனின் இணைப்புகள் யாவற்றிற்கும் ஒவ்வொரு காலைப் பொழுது வரும் போதும் தர்மம் செய்வது கடமையாகும். (அது யாதெனில்) ஒவ்வொரு “சுப்ஹானல்லாஹ்வும்” தர்மமாகும். ஒவ்வொரு “அல்ஹம்துலில்லாஹ்வும்” தர்மமாகும்இ ஒவ்வொரு “லாயிலாஹா இல்லல்லாஹ்வும்” தர்மமாகும்இ ஒவ்வொரு “அல்லாஹ் அக்பரும்” தர்மமாகும். நல்லதை ஏவுவதும் தர்மமே! தீயதைத் தடுப்பதும் தர்மம் தான். அவை யாவற்றுக்கும் ஈடாக இரண்டு ரக அத்துகள் ’ளுஹாவின்’ போது தொழுகிறாறோ அது போதுமானதாயிருக்கும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூதர்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

’ளுஹாத’; (தொழுகை) நான்கு ரக அத்துகள் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 365

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ’ளுஹாத்’ தொழுகையை நான்கு ரக அத்துகளாக தொழுதுள்ளனர். அல்லாஹ் நாடிய அளவிற்கு அதிகப்படுத்தியுமுள்ளனர். என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

’ளுஹாத்’ தொழுகை எட்டு ரக அத்துகள் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 366

அப்துல்லாஹ் பின் அல் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ’ளுஹா’ நபிலை தொழுதார்களா? என எனக்கு அறிவிக்கும் ஒருவரை ஐனங்களுக்கு மத்தியில் பெற்று விட வேண்டுமென யார் யாரையோ கேட்டேன். (ஆனால்) அது பற்றிக்கூறும் எவரும் கிடைக்கவில்லை. ஆயினும் அபூதாலிபின் மகள் உம்முஹானீ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்இ

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றியின் போதுஇ பகல் உயர்ந்த போது ஒரு துணியைக் கொண்டு வந்து அவர்களுக்கு மறைப்பாக ஆக்கப்பட்டது. (அதன் பிறகு) குளித்தார்கள். பின் எட்டு ரக அத்துகளைத் தொழுதார்கள்.

அவர்கள் அத்தொழுகையில் நிலையில் நின்றதுதான் அதிகமா? அல்லது ருகூவு? அல்லது ஸுஐ{தா? என்பது எனக்குத் தெரியவில்லை. அவையாவும் ஒன்றுக்கொன்று சமமாக இருந்தது. அ(து போன்ற)த் தொழுகையை முன்போஇ அதற்கு பின்போ அவர்கள் தொழுக நான் காணவில்லை என எனக்கு அறிவித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு

’ளுஹாத்’ தொழுகையை பற்றிய உபதேசம் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 367

ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டுமென்றும்இ ளுஹா(வின் போது) இரண்டு ரக அத்துகள் தொழ வேண்டும் எனறும்இ நான் உறங்கும் முன் ’வித்ரு’ தொழுக வேண்டுமெனவும் எனது உற்ற நண்பர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு வஸிய்யத்துச் செய்தார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

’அவ்வாபீன்’ தொழுகை பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 368

நிச்சயமாக! iஐது பின் அல் அர்(க்)கம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சாராரை ளுஹா நேரத்தில் தொழுகக் கண்டார்கள்இ அப்போது அவர்இ இந்த நேரமல்லாத வேறு நேரத்தில் தொழுவுதுஇ நிச்சயமாக! மிகச் சிறந்ததாகும் என்றுஇ அவர்கள் அறிந்து (கொண்டு) விட்டனர். என்பதை தெரிந்து கொள்இ நிச்சயமாக! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘‘அவ்வாபீன் தொழுகை என்பதுஇ ஒட்டகக்குட்டிகள் (சுட்டமணலின் சூடு தாங்காமல் தரையிலிருந்து) எழுந்து விடும் நேரத்தில் தொழும் தொழுகையாகும் என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்காஸிம் அஷ்ஷைபானீ ரளியல்லாஹு அன்ஹு

யார் இறைவனுக்காக ‘ஸஜ்தா‘ செய்கிறாரோ அவருக்கு ‘சுவர்க்கம்‘ உண்டென்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 369

‘ஸஜ்தா‘(வின் ஆயத்தை)வை ஆதமின் மகன் ஓதிவிட்டு (அதற்குரிய) ‘ஸஜ்தா‘வை அவர் செய்துவிட்டதனால் ஷைத்தான் (அவரை விட்டும்) விலகி நின்றுஇ “அவனுக்கு வந்தகேடே!” (அபூகுறைப்பின் அறிவிப்பில்: எனக்கு வந்தகேடே! என உள்ளது.) ஆதமின் மகன் ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடப்ப்ட்டான். (அதையேற்று) அவன் ஸஜ்தா செய்துவிட்டான். (ஆகவே) அவனுக்கு சுவனம் (உண்டு) தான் நான் (ஆதமுக்கு) ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடப்பட்டுள்டேன். (அதையேற்காது) நான் என்னை ஸஜ்தா செய்வதிலிருந்து விலக்கிக் கொண்டேன். (ஆகவே) எனக்கு நரகம் தான் எனக்கூறியவனாக அவன் அழுகிறான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

இரவிலும்இ பகலிலும் (ஃபர்ளல்லாத) பனிரெண்டு ரக்அத்துகளை தொழுவதன் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 370

ஒவ்வொரு நாளிலும் ஃபர்ளல்லாத பனிரெண்டு ரக்அத்துகளை எந்த (ஒரு) முஸ்லிமான அடியானும் அல்லாஹ்விற்க்காக தொழுவதில்லை. அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் ஒரு வீட்டை கட்டியே தவிர அல்லது அவருக்கு சுவனத்தில் ஒரு வீடு கட்டப்பட்டே தவிர என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நிச்சயமாக (தான்) செவியுற்றதாகஇ நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் துனைவியார் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (அவ்வாறு அறிவித்தன்) ‘‘பிறகு நான் தவறாது அத்தொழுகையைத் தொழுது கொண்டிருந்தேன்‘‘ என (அன்னை) உம்மு ஹபீபா அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அம்ரு (இப்னு அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு) அவர்க(ளும்) “அதன்பின் நான் தவறாமல் அத்தொழுகையைத் தொழுகலானேன்” எனக்கூறியிருக்கிறார். நுஃமான் (பின்ஸாலிம் ரளியல்லாஹு அன்ஹு) அவர்களும் அவ்வாறே கூறியிருக்கிறார்கள். (மேற்கூறிய அறிவிப்பில் ஒவ்வொரு நாளும் என வந்துள்ளது போன்று) வேறு ஒரு அறிவிப்பில் “பகலிலும் இரவிலும்” என வந்துள்ளது.

இரு பாங்குகளுக்கு (பாங்குக்கும் இகாமத்திற்கும்) இடையில் ஒரு தொழுகை உண்டு என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 371

“இரு பாங்குகளுக்கும் (பாங்குக்கும் இகாமத்திற்கும்) இடையில் ஒரு தொழுகை உண்டு.” அதைஇ மும்முறை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மூன்றாம் முறையில்இ விருப்பட்டவருக்கு என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ்பின் முகஃப்பல் அல்முஜனிய்யு ரளியல்லாஹு அன்ஹு

தொழுகைக்கு முன்பும்இ அதற்குப்பிறகும் நஃபில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 372

லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்துகளையும் அதற்குப்பிறகு இரண்டு ரக்அத்துகளையும்இ மஃக்ரிபுக்கு பிறகு இரண்டு ரக்அத்துகளையும் இஷாவிற்குப்பிறகு இரண்டு ரக்அத்துகளையும் ஜும்ஆவிற்குப்பிறகு இரண்டு ரக்அத்துகளையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு) தொழுதேன். (ஆனால்) ‘மஃக்ரிபுஇ இஷாஇ ஜும்ஆ‘ (ஆகியவற்றின் சுன்னத்துகளை) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன்இ அவர்களது இல்லத்தில் தொழுதிருக்கிறேன் என இப்னுஇ உமர் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இரவிலும்இ பகலிலும் நஃபில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 373

அப்துல்லாஹ் பின் ஷகீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (கூறுகிறார்கள்) நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம்இ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை பற்றி-அவர்களது உபரி (நஃபில்) வணக்கங்கள் பற்றிக் கேட்டேன்இ அதற்கு (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் என் வீட்டில் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டுஇ அதன்பின் (வீட்டிலிருந்து) வெளியேறி(ச் சென்று) ஜனங்களுக்கு தொழுகை நடத்துவார்கள்இ அதன்பின் (வீட்டினுள்) நுழைந்துஇ இரண்டு ரக்அத்து தொழுவார்கள். (அடுத்து) மஃக்ரிபை ஜனங்களுக்கு தொழ வைப்பார்கள். அதன்பின் (வீட்டினுள்) நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். (அதுபோலவே) இஷாத் தொழுகையை ஜனங்களுக்குத் தொழ வைத்து (முடித்துக் கொண்டு) (என்வீட்டில்) நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். (மேலும்) இரவில் ஒன்பது ரக்அத்துகள் ‘வித்ரு‘ உள்பட தொழக்கூடியவர்களாக இருந்தனர்.

இரவு நேரங்களில் (சில இரவுகளில்) நீண்ட நிலை உடையவர்களாக(வும்) (சில) இரவுகளில் நீண்ட இருப்பை உடையவர்களாகவும் தொழுது வந்தனர்.

(நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் நின்ற நிலையில்1 கிராஅத் ஓதுவார்களானால் நின்ற நிலையிலேயே ‘ருகூஉம்‘இ சுஜுதும்‘ செய்வார்கள்இ அமர்ந்த நிலையில் ஓதுவார்களானால்இ அமர்ந்தே ‘ருகூஉம்‘இ சுஜுதும்‘ செயவார்கள். ‘ஃபஜ்ரு‘ உதயமாகி விட்டால்2 இரண்டு ரக்அத்துகளைத் தொழுவார்கள் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷகீக் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 நின்று தொழ ஆரம்பிப்பார்களானால் அத்தொழுகையின் ரக்அத்துகளை நின்றே தொழுவார்கள்இ உட்கார்ந்து தொழுவார்களானால்இ அத்தொழுகையளின் ரக்அத்துகளை உட்கார்ந்தே தொழுது முடிப்பார்கள் என்பதாகும்.

2 ஃபஜ்ருக்கு பாங்கு சொல்லிவிட்டால்

பள்ளியில் நஃபில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 374

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்இ பள்ளியில் பாயினால்1 சுற்றிலும் மறைத்து (அதனுள் தொழுவதற்காகவு)ம் தொழும் போது (தன்னை)இ அவர்களைக் கடந்து செல்பவர்களை (விட்டும் தடுத்து). மறைத்து கொள்வதற்காகவும் ஒரு சிறிய அறையை ஆக்கிக் (அமைத்து)க் கொண்டார்கள். அதனுள் தொழுவதற்க்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (வீட்டை விட்டுப்) புறப்பட்டு வெளியேறி வந்தனர். (அப்போது) ஜனங்களை அவர்களைத் தொடர ஆரம்பித்து அவர்களும் வந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுகையைத் தொழுதனர் என அறிவிப்பாளர் கூறுகிறார்.

அதன்பின் ‘‘(அடுத்து) இரவு(த் தொழுகைக்hக) ஜனங்களொல்லாம் வந்து ஆஜராயினர். அவர்களை விட்டும்இ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பிந்தி விட்டனர். அதாவது அவர்கள் வரவில்லை (என) அறிவிப்பாளர் கூறுகின்றார்.

(இதனால் அங்கு) வந்திருந்த (மக்கள்) சப்தத்தை உயர்த்தினர். பொடிகற்களையும் வாசலில் எறிந்தனர். அது சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள். கோப முற்றவாறு (தங்கள் வீட்டிலிருந்து) வெளிவந்து அவர்களிடம் (கூறுகின்றர்கள்). உங்களின் (இச் செயல்) இவ்வாறே இருக்குமானால் (அதன் காரணமாக) அதை உங்களின் மீது (இறைவனால்) கடமையாக்கப்பட்டு விடுமோ என நான் என்னி (அஞ்ச) வேண்டியுள்ளது. (எனவே) (இது போன்ற உபரித் தொழுகையை) உங்களது இல்லங்களில் கடைபிடித்துத் தொழுங்கள். (ஏனெனில்) மனிதனின் தொழுகையில் சிறந்தது கடமையாக்கப்பட்டதை (பர்ளை)த் தவிர (பாக்கி உபரி தொழுகையை) அவன் (தன்) வீட்டிலாகும். (வீட்டில் தொழும் தொழுகையாகும்).

நிச்சயமாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்இ பள்ளியில் ஒரு சிறிய அறையை பாயினால் ஆக்கிக் கொண்டனர் என மற்றொரு அறிவிப்பவில் உள்ளது.

குறிப்பு : 1 கஸஃபத் என்றும் ஹஸீர் என்றும் சந்தேகத்தில் அறிவிப்பாளர் கூறுகிறார். இரண்டிற்கும் பொருள் பாய்தான்.

வீடுகளில் நஃபில் (ஃபரளல்லாத தொழுகைகளை) தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 375

உங்களில் ஒருவர் பள்ளியில் தொழுகையை முடித்துக் கொண்டால் தனது தொழுகையில் ஒரு பகுதியை தனது வீட்டிற்க்காக ஆக்கி கொள்ளவும். காரணம் நிச்சயமாக அல்லாஹ் அவரது தொழுகையின் நிமித்தம் அவரது வீட்டில் நன்மையை அருளக்கூடியவனாக இருக்கிறான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு

‘உங்களில் ஒருவர் சுறுசுறுப்பாக இருக்கும் வரை அவசியம் (நின்று) தொழுகவும். அவர் சோர்வடைந்து விட்டால் அவர் அமர்ந்து விடவும்‘ என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 376

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியினுள் நுழைந்தனர். (அப்போது அங்குள்ள) இரு தூண்களுக்கு மத்தியில் நீண்ட கயிறு ஒன்று (கட்டப்பட்டு) இருந்தது. (அதைக்கண்ட நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) இது என்ன? எனக்கேட்டனர். (இது) ஜைனப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக! அவர்கள் (தொழும்போது) சோர்வடைந்து விட்டாலோஇ அசதி ஏற்ப்பட்டு விட்டாலோ அதை பிடித்துக் கொள்வார்கள் எனக்கூறப்பட்டது. (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்இ ‘அதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் அவருக்கு சுறுசுறுப்பு உள்ளவரை (நின்று) தொழுது கொள்ளவும். அவருக்கு சோம்பல்இ அசதிஇ ஏற்பட்டால் அமர்ந்து விடவும்‘ எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

‘செயல்களில் மிக விருப்பமானது அல்லாஹ்விடம் அவற்றில் நிரந்தரமானதாகும்‘ என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 377

உம்முல் முஃமினீன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் கேட்டேன். ‘உம்முல் முஃமினீன் அவர்களே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் செயல்கள் எவ்வாறு இருந்தது? நாட்களில் எதையேனும் பிரத்தியேகப்படுத்தி (எச்செயலையும் செய்யக் கூடியவராக) இருந்தனரா?‘ எனக்கேட்டதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் (அவ்வாறு ஏதும்) இல்லை. அவர்களது செயல்கள் (யாவும்) நிரந்தரமாக (எப்போதும் போல்தான்) இருந்தது. எனினும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (செயல்களில்) சக்தி பெற்ற அளவிற்கு உங்களில் யார் சக்தி பெற்றிருக்கிறார்? எனக் கூறினார்கள் என அறிவிப்பாளராகிய அல்கமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

‘செயல்களில் எது இயலுமோ? அதை எடுத்துக் கொள்ளுங்கள்‘ என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 378

ஹவ்லா பின்த் துவைத் பின் ஹபீப் பின் அப்துல் உஜ்ஜா (எனும் பெண்மனி) அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பால் சென்றனர். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுமிருந்தனர். (அப்போது) ‘இவள்தான் அல் ஹவ்லா பின் துவைத் (என அறிமுகம் செய்து) நிச்சயமாக இந்தப்பெண் இரவெல்லாம் உறங்குவதில்லை‘ என (ஜனங்கள்) எண்ணுகிறார்கள். என நான் (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘(என்ன?) அந்தப்பெண் இரவெல்லாம் உறங்குவதில்லையா?‘ என வினவிட்டு உங்களால் இயன்ற அளவிற்குள்ள செயல்களை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது சக்தியமாக! நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடையமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் ‘தொழுகை‘இ அவர்களது ‘துஆ‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 379

எனது சிறிய தாயார் மைமுனா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் அவர்களது வீட்டில் (அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய இபாதத்துகள் வணக்கங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டி) ஓரிரவு தங்கியிருந்தேன். இரவில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து தங்கள் தேவைக்கு (மலம்இ சிறுநீர் கழிக்க) வந்து விட்டு அதன்பின் தங்களது முகத்தையும் கைகளையும் கழுவிய பின் உறங்கிவிட்டார்கள். அதன்பிறகு எழுந்து (கட்டி வைக்கப்பட்டிருந்த) தண்ணீர் பையின் பால் வந்து அதன் வாய்க்கட்டை அவிழ்த்து (அதிலிருந்து) இரு ஒளுவிற்கு இடைப்பட்ட (அதாவது தண்ணீரை அதிகமாகவுமின்றி குறைவாகவுமின்றி அளவோடு உபயோகித்து) ஒரு ஒளுவை நேர்த்தியாக செய்தனர். அதன்பிறகு (தொழுகைக்காக) நின்று தொழ ஆரம்பித்தனர். அப்போது நான் எழுந்துஇ நிச்சயமாக நான் உஷாராகி அவர்களைக் கண்காணிக்கின்றேன் என்பதை அவர்கள் பார்த்து விடுவதை வெறுத்ததன் நிமித்தம் சோம்பல் முறித்துக் கொண்டேன். அதன்பின் ஒளுவும் செய்து கொண்டு (வந்தேன் அப்போது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்)அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

எனவே நான் அவர்களின் இடது பக்கத்தில் (சென்று) நின்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எனது கையைப்பிடித்து சுற்றவைத்து (தங்களது) வலது பக்கம் ஆக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் இரவுத் தொழுகையானது பதிமூன்று (13) ரக்அத்துகளாக நிறைவு பெற்றன. அதன்பின் படுத்து கொரட்டை விட்டு உறங்கினார்கள். அவர்கள் உறங்கும் போது கொரட்டை விடுவார்கள். அதன்பின் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து அவர்களிடம் தொழுகையைப் பற்றி அறிவித்த போது (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம); அவர்கள் எழுந்து (அப்படியே) ஒளுச் செய்யாது தொழுதனர். அவர்களது துஅவில்

யாஅல்லாஹ்! எனது இதயத்தில் ஒளியை ஆக்குவாயாக!
எனது பார்வையில் ஒளியை ஆக்குவாயாக!
எனது செவியில் ஒளியை ஆக்குவாயாக!
எனது வலப்புறம் ஒளியை ஆக்குவாயாக!
எனது இடப்புறம் ஒளியை ஆக்குவாயாக!
எனது மேலிருந்து ஒளியை ஆக்குவாயாக!
எனக்கு கீழ் ஒளியை ஆக்குவாயாக!
எனக்கு முன்னால் ஒளியை ஆக்குவாயாக!
எனக்கு பின்னால் ஒளியை ஆக்குவாயாக!
ஒளியை மகத்தானதாக எனக்கு ஆக்கி (அருள்) வாயாக! எனக்கூறிக் கொண்டிருந்தனர் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

என் மனதில் ஏழு வார்த்தைகளை நான் வைக்கிறேன். ஆயினும் அதை நான் மறந்து விட்டேன். அப்பாஸின் மக்களில் சிலரை நான் சந்தித்தேன். அவைகளை எனக்கு கூற ஆரம்பித்து அஸபீஇ வலஹ்மீஇ வத(ம்)மீஇ வஷஃரீ ஆகிய (ஜந்து வார்த்தைகளையும் அதன்பிறகு) இரண்டையும் கூறினார் என குரைப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்.

குறிப்பு : 1 மேற்கூறிய ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்கி விழித்தவாறு சென்று தொழுத நிகழ்ச்சி பிறிதொரு ஹதீஸில் விளக்கப்பட்டுள்ளபடிஇ இது நபிமார்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதை முஸ்லீம்கள் நினைவில் கொள்ளவும்.

2 குரைப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஏழு வார்த்தைகளைப் பற்றிய ஹதீஸில் உள்ளவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ‘துஆ‘ வில் உள்ள வார்த்தையாகும்.

ஹதீஸ் எண் : 380

இரவில் தொழுவதற்காக எழுந்தால் இலேசான இரண்டு ரக்அத்துகளைக் கொண்டு தங்களது தொழுகையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பிப்பார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்