Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 15

 தொழுகை பற்றிய நூல்

ஸஜ்தாவில் இரு முழங்கைகளையும் தரையில் இருந்து உயர்த்தி இரு புஜங்களையும் விலாபகுதியில் இருந்து தூரமாக்கிக் கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 301

“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஜ்தா செய்வார்களாயின், அவர்களது அக்குளின் வெள்ளைநிறம் வெளியில் தெரியும் அளவிற்கு, தங்களது இரு கைகளையும் (அதாவது இரு முழங்கைகளையும் தரையிலிருந்து உயர்த்தி, இரு புஜங்களையும் விலாப்பகுதியிலிருந்து) தூரமாக்கிக் கொள்வார்கள்.” என அப்துல்லாஹ்பின் புஹைனா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

தொழுகையில் அமரும் முறை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 302

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் உட்கார்ந்தால் தங்களது இடது பாதத்தை தங்களின் தொடைக்கும் கெண்டைகாலுக்கும் மத்தியில் ஆக்கி தங்களது வலது பாதத்தை விரித்து (படுக்க) வைத்தார்கள். தங்களின் இடது கையை இடது முட்டுகாலின் மீது வைத்தார்கள். தங்களின் வலக்கரத்தை தங்களது வலது தொடையின் மீது வைத்தார்கள் தங்களது விரலால் சைக்கினையும் செய்தார்கள்” என அப்துல்லாஹ் பின் அஜ்ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இரு பாதங்களின் மீது அமருதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 303

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இரு பாதங்களின் மீது அமருவது பற்றி நாங்கள் கேட்டோம். (அதற்கவர்கள்) அது சுன்னத்தாகும் என்று கூறினார். நிச்சயமாக நாம் அதை ஒரு விருப்பமற்ற செயலாகக் காண்கிறோம் என நாங்கள் கூறினோம். (அதற்கு) மாறாக அ(வ்வாறு செய்வ)து உனது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தாகும் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : தாவூஸ் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : இந்த ஹதீஸில் வந்துள்ள “இக்ஆஉ” என்பதற்கு பல பொருள்கள் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இரு பொருள்கள் மட்டுமே சரியானதாகும். ஓன்று விலக்கப்பட்டுள்ளது. “அதுவே நாய் அமருவது போன்று பின்பகுதியை தரையில் வைத்து இரு கெண்டைகால்களையும் நட்ட வைத்து தனது இரு கைகளையும் தரையில் ஊன்றிக் கொள்வது” மற்றொன்று ஆகுமாக்கப்பட்ட சுன்னத்தாகும். அதுவே தனது இரு ஸஜ்தாவிற்கு மத்தியில் தனது இரு பின்பகுதிகளையும் பின்னால் ஆக்குவது (முதல் இருப்பில் இருப்பது போன்று இடது காலைப்படுக்க வைத்து வலது காலை நட்டு வைத்து அமருவதாகும்) இவ்வகையைத்தான் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “உனது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தாகும்” எனக்கூறினர்.

தொழுகையில் ‘தஷ்ஹ்ஹுத்‘ (அத்திஹிய்யாத் ஓதுவது) பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 304

அபூமுஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒரு தொழுகை நான் தொழுதேன். இருப்பில் அவர் இருந்த போது நன்மையானவற்றைக் கொண்டும், ஜக்காத்தைக் கொண்டும் தொழுகை நிலைபெற்றுவிட்டது எனக் கூட்டத்திலிருந்த ஒருவர் கூறினார். அபூமுஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்துவிட்டுத் திரும்பி இன்ன இன்ன வார்த்தைகளை உங்களில் கூறியவர் யார்? எனக்கேட்டார். கூட்டத்தவர் அமைதியாக (பேசாது) இருந்தனர். இரண்டாம் முறை இன்ன இன்ன வார்த்தைகளை உங்களில் கூறியவர் யார்? எனக்கேட்டார். கூட்டத்தவர் அமைதியாக (பேசாது) இருந்தனர். ஹித்தானே! நீர் அதைக் கூறியிருக்கலாம் என்றார். இவ்வாறு என்னிடம் கேட்டு என்னை பயமுறுத்தி அழவைத்து விடுவீர் என்பதை நிச்சயமாக பயந்துவிட்டேன் என (ஹித்தான்) கூறினார். (இதற்கிடையில்) கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் அதை நான் (தான்) கூறினேன். (ஆனால்) நன்மையல்லாது வேறு எதையும் (அதன்மூலம்) நான் நாடவில்லை (எனக்கூறினார்) உங்களது தொழுகையில் எவ்வாறு (என்ன) கூற வேண்டுமென்று உங்களுக்குத் தெரியவில்லை என அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறிவிட்டு

‘‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு பிரசங்கம் நிகழ்த்தினார்கள். எங்களது வழிமுறைகளை எங்களுக்கு தெளிவு படுத்தினார்கள் எங்களது தொழுகைகளை (எவ்வாறு தொழ வேண்டுமென) எங்களுக்கு கற்றுத் தந்துள்ளார்கள். (அதன் விபரம் நீங்கள் தொழுகைக்காக நின்றால் உங்களது வரிசைகளை சரியாக்கிக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு இமாமாக இருந்து தொழுகை நடத்தி தரவும். (ஆகவே) அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ‘கைரில் மக்ளுபி அலைஹிம் வலள்ளாள்ளீன்‘ எனக்கூறினால் நீங்கள் ‘ஆமீன்‘ கூறுங்கள். (அதன் மூலம்) அல்லாஹ் உங்களது பிரார்த்தனைகளை அங்கிகரிக்கின்றான். அவர் தக்பீர் கூறி ருகூஉ செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉ செய்யுங்கள் (காரணம்) நிச்சயமாக இமாம் (தொழுகை நடத்துபவர்) உங்களுக்கு முன்பாக ‘ருகூஉ‘ செய்கிறார். அது (அவர் முதலில் ருகூஉவிற்கு செல்வது) அதற்கு (ருகூஉவிலிருந்து அவருக்குப்பிறகு நீங்கள் உயர்வதற்கு) சமம் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அவர் ‘‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்‘‘ எனக்கூறினால் நீங்கள் ‘‘அல்லாஹீம்மரப்னா ல(க்)கல் ஹம்து‘‘ எனக்கூறுங்கள் உங்களது (கூற்றை) அல்லாஹ் கேட்கி(செவியுறுகி)றான். நிச்சயமாக பரக்கத்துகளை நல்குபவனும் உயர்வானவனுமாகிய அல்லாஹ், தன்னைப்புகழ்ந்த வரை (அவரது கூற்றை) செவியுற்று விட்டதாக தனது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் நாவின் மூலம் கூறிவிட்டான். (அதன்பிறகு) அவர் தக்பீர் கூறி ஸஜ்தா செய்துவிட்டால் நீங்களும் தக்பீர் ஸஜ்தா செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தா செய்கிறார் உங்களுக்கு முன்பு உயர்கிறார். அது (உங்களுக்கு முன் ஸஜ்தாவிற்கு அவர் செல்வது) அதற்கு (நீங்கள் அவருக்குப் பின் ஸஜதாவிற்கு உயருவதற்கு) சமம் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அதன்பிறகு) இருப்பில் உங்களில் ஒருவர் கூறக்கூடிய கூற்றில் முதாலவது “அத்திஹிய்யாத்து அத்தய்யிபாத்து அஸ்ஸலவாத்து அஸ்லாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில் லாஹிஸ்ஸாலிஹீன் அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரசூலுஹு” வாக இருக்க வேண்டும் எனக்கூறினார்கள் என அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாக அறிவிப்பவர் ஹித்தான் பின் அப்துல்லாஹ் அர்ரிகாஷிய்யி ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 305

(குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தைக் கற்றுத்தருவது போன்று) ‘தஷஹ்ஹுதை‘ எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுக்கக் கூடியவர்களாக இருந்தனர்.

‘‘அத்தஹிய்யாத்து அல்முபாரகாத்து அஸ்ஸலவாத்து அத்தய்யிபாத்து லில்லாஹி, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வலா இபாதில்லாஹிஸ்ஸாலிஹீன் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹி‘‘ என்று சொல்லக் கூடியவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : ‘‘குர்ஆனைக் கற்றுத்தருவதைப் போன்று‘‘ என்ற வாசகம் இப்னு ரும்ஹு அவர்களின் அறிவிப்பில் பதிவாகியுள்ளது.

தொழுகையில் எதை கர்ககத்தேடப்பட வேண்டுமோ அது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 306

“அல்லாஹும்ம இன்னீ அவூதுபி(க்)க மின்அதாபில் கப்ரி வஆதுபி(க்)க மின்ஃபித்னத்தில் மஸீஹித்தஜ்ஜாலி வஅதுபி(க்)க மின்பித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி அல்லாஹும்ம இன்னி அவூதுபிக்க மினல் மஃஸமி வல் மக்ரம்” என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக தொழுகையில் துஆ கேட்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நிச்சயமாக தனக்கு அறிவித்ததாக உர்வா பின் அஜ்ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (மேலும்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! கடன் தொல்லையிலிருந்து தங்களை காக்கத் தேடுவதை மிக அதிகமாக ஆக்கியது எது? என கேட்பவர் கேட்டார். அதற்கவர்கள் நிச்சயமாக ஒரு மனிதன் கடன்பட்டுவிட்டால் அதை நிறைவேற்ற இயலாத நிலைக்கு ஆளானால் பொய் கூறுகிறார், வாக்களிக்கிறார், (அதை நிறைவேற்ற முடியாது) அதற்கு மாற்றம் செய்கிறார். எனக்கூறினார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹுh அவர்கள் கூறுகிறார்கள்.

தொழுகையில் துஆ ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 307

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒரு துஆவை எனக்கு கற்றுக் கொடுங்கள் அதை நான் என் தொழுகையில்1 கூறுவேன் என்றனர். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) அல்லாஹும்ம இன்னீளலம்து நஃப்ஸீ, ளுல்மன் கபீரன்2 வலாயஃபிருத்துனூப இல்லா அன்(த்)த ஃபக்ஃபிர்லிமக்ஃபி(ரத்)தன் மின் இன்திக்க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கபூருர்ரஹீம் சொல்லுமாறு கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 மற்றொரு அறிவிப்பில் என் வீட்டில் கூறுவேன் என உள்ளது.

2 மற்றொரு அறிவிப்பில் கஸீரன் என வந்துள்ளது.

தொழுகையில் ஷைத்தானை சபிப்பது பற்றியும் அவனின் தீமையிலிருந்து காக்கத் தேடுவது பற்றியும் உள்ள பாடம்.

ஹதீஸ் எண் : 308

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (தொழுகையில்) நின்று “அஊது பில்லாஹிமின்(க்)க”, அல்லாஹ்வைக் கொண்டு உன்னைக் கொண்டு உன்னை(உன் தீமையை) விட்டும் காக்கத்தேடுகிறேன் என அவர்கள் கூற நாங்கள் செவியுற்றோம் என அபூதர்தாஉ ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் மேலும் ‘அல்அனுக்க பிலஃனத்தில்லாஹி‘ “அல்லாஹ்வின் சாபத்தைக் கொண்டு உன்னை நான் சாபமிடுகிறேன்” என மும்முறை கூறினார்கள். மேலும் தங்களது கையை (நீட்டி) எதையோ பிடிப்பதை போன்று விரிக்கவும் செய்தார்கள். தொழுகையை அவர்கள் முடித்துக் கொண்ட பொழுது,அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! தொழுகையில் ஏதோ ஒன்றை தாங்கள் கூற நாங்கள் செவியுற்றோம் (ஆனால்) அதற்கு முன்பு (வரை) நீங்கள் எதையும் சொல்லி நாங்கள் செவியுறவில்லையே! அதோடு உங்களது கையை விரிக்கவும் கண்டோமே! என்றனர். அதற்கு (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வின் எதிரியான ‘இப்லிஸ்‘, நெருப்பின் ஒரு பந்தத்தை எடுத்துக் கொண்டு வந்து என் முகத்தில் ஆக்கு(எறி)வதற்கு வந்தான். அப்போது நான் அல்லாஹ்வைக் கொண்டு உன்னை விட்டும் கார்மானம் தேடுகிறேன் என்று மும்முறை கூறினேன். அதன் பிறகு அல்லாஹ்வின் பூரணமான சாபத்தைக் கொண்டு உன்னை நான் சபிக்கிறேன் என்று மும்முறை கூறினேன். (இதற்கு) பின்னும் அவன் செல்லவில்லை. அதனால் அவனைப் பிடிக்க நாடினேன். நமது சகோதரர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆ மடடும் இல்லாதிருப்பின் (அவன்) கட்டப்பட்டவனாகவே காலை பொழுதை அடைந்திருப்பான். மதினத்துவாசிகளின் குழந்தைகளும் அவனோடு விளையாடிருப்பர் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ தர்தாஉ ரளியல்லாஹு அன்ஹு

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்து சொல்வது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 309

ஸஅது பின் உபாதாவின் மஐ;லிஸில் நாங்கள் அமர்திருக்க, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களி(அவ்வி)டம் வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! “‘கண்ணியமும்,மகத்துவமும் உடைய அல்லாஹ் உங்களின் மீது நாங்கள் ஸலவாத்து கூற வேண்டுமெனக் கட்டளையிட்டுள்ளான். உங்கள் மீது எவ்வாறு நாங்கள் ஸலவாத்துச் சொல்ல வேண்டும்” என பஷீர் பின் ஸஅது ரளியல்லாஹ் அன்ஹு கேட்டனர். அதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பேசாதிருந்தனர். (இதைப்பார்த்து நிச்சயமாக அவர் கேட்காதிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என நாங்கள் ஆசைப்பட்டோம். (அந்த அளவிற்குப் போதிருந்து விட்டு) பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா ஆலி இபுறாஷீம வபாரிக் அலா முஹம்மதின், வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இபுறாஷீம ஃபில் ஆலமின் இன்னக்க ஹமீதுன் மஜீது” எனக்கூறுங்கள் (என்று கூறிய பின்) ஸலாம் கூறுவது நீங்கள் (ஏற்கனவே) தெரிந்திருப்பதைப் போன்றே கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபு மஸ்ஊது அல்அன்சாரி ரளியல்லாஹு அன்ஹு

தொழுகையில் ஸலாம் கூறுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 310

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் கன்னத்தின் வெண்மையை நான் கானுகின்ற வரை அவர்களது வலப்பக்கமும், அவர்களது இடப்பக்கமும் ஸலாம் கொடுக்க நான் பார்க்கக் கூடியவனாக இருந்தேன்”

அறிவிப்பவர் : ஆமிர் பின் ஸஅது ரளியல்லாஹு அன்ஹுமா

தொழுகையிலிருந்து ஸலாம் கொடுக்கின்ற போது கையினால் சைக்கினை செய்வது வெறுக்கத்தக்கதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 311

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதால் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்‘ ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்‘, எனச் சொல்லி கொண்டிருந்தோம் எனக்கூறிவிட்டு மேலும் தனது கையினால் இரு பக்கத்திலும் சைக்கினையும் செய்தார்.

‘‘இதைப்பார்த்த (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) உங்களது கைகளைக் கொண்டு ஏன் எதற்காக இவ்வாறு சைக்கினை செய்கிறீர்கள்? (இன்னொரு அறிவிப்பில் நிலையில்லாத குதிரைகள் வால்களையும் கால்களையும் (அசைப்பது) போன்று உங்களது கைகளை நீங்கள் உயர்த்தியவாறு இருக்க (இருபுறமும் சைக்கினை செய்ய) உங்களை நான் காண எனக்கு என்ன நேர்ந்தது? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டு விட்டு, உங்களில் ஒருவருக்குப் போதுமானதெல்லாம் தனது கையை தொடையின் மீது வைத்துக்கொண்டு அதன்பிறகு அவரது வலப்புறமும் இடப்புறமும் இருக்கும் சகோதரரின் மீது ஸலாம் கூறுவார் என்றார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு

தொழுகையிலிருந்து ஸலாம் கொடுத்த பிறகு சொல்லப்பட வேண்டியது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 312

முகீரா பின் ஷுஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதினார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்துவிட்டால் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலாகுல்லிஷைஇன் கதீர், அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதை(த்)த வஅலா முஃதிய லிமா மனஃ(த்)த வலாயன்ஃபஉ தல்ஜத்தி மின்(க்)கல் ஜத்து என்றுகூறுவார்கள்.

அறிவிப்பவர் : முகீராபின் ஷுஃபாவினால் உரிமை எழுதி விடப்பட்ட வர்ராத் ரளியல்லாஹு அன்ஹு

தொழுகைக்குப் பிறகு தக்பீர் (கூறுவது) பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 313

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை முடிந்து விட்டது என்பதை (அவர்கள் கூறும்) தக்பீரின் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டிருந்தோம் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்.

தொழுகைக்குப்பிறகு தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர் (கூறுவது) பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 314

யார் ஒருவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் முப்பத்து மூன்று தடவை அல்லாஹ்வை1 துதித்தாரோ முப்பத்து மூன்று முறை அல்லாஹ்வை2 புகழ்ந்தாரோ, முப்பத்து மூன்று முறை அல்லாஹ்வை3 மிகப்பெரியவனாக்கினாரோ அவை 99 ஆகிவிட்ட (பின்) நூறை (100) நிறைவு செய்ய ‘லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)கலஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்‘ எனக்கூறிவிட்டாரோ அவரது தவறுகள், கடல் நுரை போன்றிருப்பினும் மன்னிக்கப்பட்டுவிடும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 ஸுப்ஹானல்லாஹ் 2 அல்ஹம்து லில்லாஹ் 3 அல்லாஹு அக்பர்

குறிப்பு : அல்லாஹு அக்பர் என்பதையே 34 வது முறையாகச் சொல்லி விடுவது பற்றிய அறிவிப்பும் உள்ளது. இந்த ஹதீஸில் கூறப்பட்ட முறையும் வந்துள்ளது. இவ்விரண்டையும் பேணி நடக்க ஒரு முறை, 34 முறையும் தக்பீர் கூறிவிட்டும் மற்றொரு முறை 33 முறை தக்பீர் கூறிய பின் லாஇலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷைஇன் கதீர் என்றும் கூறிக்கொள்வதாகும். இரண்டு ஹதீஸில் வந்துள்ளபடி செயல்பட மேற்கூறப்பட்ட இரண்டு முறையாகவும் என்பது தெளிவாகிறது.

தொழுகையிலிருந்து வலப்பக்கம், இடப்பக்கம் திரும்புவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 315

தன்னிலிருந்து ஒரு பங்கை உங்களில் யாரும் ஷைத்தானுக்கு ஆக்கிவிட வேண்டாம். நிச்சயமாக அவரின் மீது வலப்பக்கம் (தொழுகையில்) திரும்புவது மட்டும்தான் உரிமையென அவர் காண (கருத) வேண்டாம், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது இடப்பக்கம் திரும்பக்கூடியவர்களாக மிக அதிகமாக நான் கண்டேன் என அப்துல்லாஹ்பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பு : தொழுகையிலிருந்து ஸலாம் கொடுக்க வலது பக்கம் மட்டும் திரும்புவது கடமையென கொள்ள வேண்டாம். இடது பக்கமும் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் திரும்பியிருக்கிறார்கள் என்பதையும் கடமையாகக் கொள்ள வேண்டும்.

இகாமத்துச் செய்ய மிக உரியவர் யார்? என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 316

கூட்டத்தவரு(ஜமா அத்தினரு)க்கு அல்லாஹ்வின் வேதத்தை அவர்களில் யார் மிக நன்றாக ஓதுகிறாரோ? அவர்தான் இகாமத்துச் செய்வார். குர்ஆனை ஓதவதில் அவர்கள் சமமான நிலையுடையவர்களாயிருப்பின் சுன்னத்தைப் பற்றி அவர்களில் யார் மிகத் தெரிந்தவராக இருக்கிறாரோ அவராவார். சுன்னத்தைப் பற்றி அறிந்த விஷயத்தில் அவர்களெல்லாம் சமமானவர்களாயிருப்பின் ‘ஹிஜ்ரத்‘ செய்ததில் யார் மிக முந்தியவராக இருக்கிறாரோ? அவராவார். ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமமானவர்களாயிருப்பின் இஸ்லாத்தை ஏற்பதில் யார் முந்தியவராக இருக்கிறாரோ? அவராவார். ஓரு மனிதர் ஒரு மனிதரின் அதிகாரத்திற்குத் கீழ் இருக்கும் போது (அவர் அனுமதியின்றி இகாமத் செய்ய வேண்டாம்) அவரது வீட்டில் அவருக்காக உள்ள இருக்கையில் அவர் அனுமதியின்றி அமரவேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமஸ்ஊது அல் அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : ஒருவர் இருக்கையில் மற்றவர் அமருவது முறையல்ல என்பதையும் தெளிவுபடுத்திவிட்டு அவர் அனுமதியளித்தால் அமரலாம் என்ற உரிமையும் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கிக் கூறுகிறார்கள்.

ஓரு வீட்டிற்கு நாம் விருந்தினராக சென்றிருக்க தொழுகை நேரம் வந்துவிட்டதல் அவ்வீட்டுக்காரரின் அனுமதியின்றி நாம் தொழுகையை நடத்தி வைப்பதுகூடாது. வீட்டுக்காரர் தகுதியுடையவராக இருந்து அவரே இமமாக நின்று தொழுகையை நடத்தியும் தரலாம். நாமல்லாத மற்றவரை அவர் தகுதியுடையவராக கருதி அந்த மற்றவரையும் தொழுகையை நடத்தி தரவும் கூறலாம். ஆகவே தான் அவரின் அனுமதி அவசியம் என்பதை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் தெளிவுபடுத்திக் காட்டுகிறார்கள். அதுபோலவே ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தகுதியை அல்லாஹ் தந்திருக்கின்றான். (அது போலவே) ஒவ்வொருவருக்கும் அவரவர்கென அமருவதற்கு ஒரு இடத்தை பிரத்தியோகமாக வைத்திருப்பர் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்கள்.

இமாமைப் பின்பற்றுவது, அவருக்குப் பிறகு செயல்படுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 317

‘‘நிச்சயமாக அவர்க(சஹாபாக்க)ள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழக்கூடியவர்களாக இருந்தனர். (விளக்கம்) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ருகூஉ‘ செய்வார்களானால் அவர்க(சஹாபாகக்)ளும் ‘ருகூஉ‘ செய்வார்கள். (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘ருகூஉ‘விலிருந்து தங்களது தலையை உயர்த்தி ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்‘ எனக்கூறுவார்களானால் நாங்கள் அவர்களது நெற்றியை பூமியில் வைத்துவிட்டார்கள் என்பதைக்கானும் வரை நின்றவர்களாகவே இருந்துவிட்டு, அதன்பிறகு தான் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைத் தொடர்வோம்‘‘ என பராஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இமாம்களுக்கு தொழுகைகளை நிறைவான முறையில் இலேசாக்குமாறு கட்டளை என்பது பற்றய பாடம்.

ஹதீஸ் எண் : 318

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்பால் வந்து, ‘‘நிச்சயமாக நான் ஸுபுஹுத் தொழுகையை இன்னவர் எங்களுக்கு நீட்டி விடுவதன் (நீண்ட அத்தியாங்களை ஓதி தொழவைப்பதன்) காரணமாக (அத்தொழுகையை விட்டும்) பிந்திவிடுகிறேன் எனக்கூறினார். (அதைக்கேட்ட) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றைய தினம் கோபப்பட்ட அளவிற்கு மிகக்கடினமாக (வேறு) எந்த உபதேசத்தின் போதும் கோபப்பட்டுவிட்டதை நான் பார்த்ததில்லை (அவ்வளவு கடுங்கோபப்பட்டு விட்டு) மனிதர்களே! நிச்சயமாக உங்களில் (சிலர்) வெறுப்பை உண்டாக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். (ஆகவே) உங்களில் யாரேனும் ஜனங்களுக்கு இமமாக தொழுகை நடத்தினால் இலேசாக்கி சுருக்கமாக்கி)க் கொள்ளவும் (காரணம்) நிச்சயமாக வயதானவர்களும், பலஹீனமானவர்களும் தேவையுடையவர்களுமிருப்பர் எனக்கூறினார்கள் என அபூமஸ்ஊது அல் அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இமாம் நோய்வாய்பட்டுவிட்டால் அவருக்கு பதிலாக (ஒருவரை) ஆக்குவது பற்றியும் அவர் ஜனங்களுக்கு தொழுகை நடத்துவது பற்றியும் தெளிவுபடுத்தும் பாடம்.

ஹதீஸ் எண் : 319

(அறிவிப்பாளராகிய நான்) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் வியாதியைப் பற்றி எனக்கு நீங்கள் அறிவித்துத் தரலாமா? என அவர்களிடம் கேட்டேன். (அதற்கு) ‘ஆம்‘ எனக்கூறிவிட்டு ‘நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கனமாகி (உடல் நலகுறைவாகி) விட்டனர். (அச்சமயம்) ஜனங்கள் தொழுது விட்டார்களா? எனக் கேட்டனர். நாங்கள் ‘இல்லை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! அவர்கள் உங்களை எதிர்பார்க்கிறார்கள்‘ எனக்கூறினோம். குளிக்கும் பாத்திரத்தில் எனக்காக தண்ணீர் வையுங்கள் என்றார்கள். அவ்வாறே செய்தோம். குளித்துவிட்டுப் பிறகு சென்றனர்.

(அப்போது) மயக்கமுற்று விட்டனர். அதன்பிறகு தெளிவடைந்து ‘ஜனங்களெல்லாம் தொழுது விட்டார்களா? எனக்கேட்டனர். ‘இல்லை! அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்கள் உங்களை எதிர்பார்க்கின்றனர்‘ எனக்கூறினோம். (அப்போது) குளிக்கும் பாத்திரத்தில் எனக்காக தண்ணீர் வையுங்கள் என்றார்கள். அவ்வாறே செய்தோம். குளித்துவிட்டுப் பிறகு சென்றனர். அப்போது மயக்கமுற்று விட்டனர். பிறகு தெளிந்து ஜனங்களொல்லாம்; தொழுது விட்டார்களா? எனக்கேட்டனர். நாங்கள் ‘இல்லை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! அவர்கள் உங்களை எதிர்பார்க்கிறார்கள்‘ எனக்கூறினோம். (அதற்கவர்கள்) குளிக்கும் பாத்திரத்தில் எனக்காக தண்ணீர் வையுங்கள் என்றார்கள். அவ்வாறே செய்தோம். குளித்துவிட்டுப் பிறகு சென்றனர். அவர்களுக்கு மயக்கமேற்பட்டு விட்டது. அதன்பிறகு அவர்கள் தெளிந்து ஜனங்களொல்லாம் தொழுது விட்டார்களா? என்றனர். இல்லை அலல்hஹவின் தூதர் அவர்களே! அவர்கள் உங்களை எதிர்பார்கிறார்கள்‘ எனக்கூறினோம்.

பள்ளியில் ஜனங்களெல்லாம் கடைசி இஷாவைத் தொழுவதற்க்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்பார்த்தவாறு பள்ளியில் தங்கியிருந்தனர் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.

அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின்பால் ஒரு மனிதரை அனுப்பி மக்களுக்கு தொழுகையை நடத்தித்தருமாறு கூறச்சொன்னார்கள். (அனுப்பி வைக்கப்பட்ட) அவர், அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் ஜனங்களுக்கு தொழுகையை நடத்தி தருமாறு கட்டளையிடுகின்றனர்‘ எனக்கூறினார். அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இரக்கமனம் படைத்தவராக இருந்தனர். (எனவே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து) ‘உமரே! ஜனங்களுக்கு தொழுகையை நடத்தித் கொடுங்கள்‘ என்றனர். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நீங்கள் தான் அதற்கு மிகுந்த உரிமையுடையவர்கள்‘ என்றனர். ஆகவே அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த நாட்களில் ஜனங்களுக்கு தொழுகையை நடத்தி கொடுத்தனர் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்.

அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களில் இலேசைப் பெற்றதால் (உடல் நலம் சீரானதால்) இரண்டு மனிதர்களுக்கு மத்தியில் (அவர்கள் தாங்கிப் பிடித்துக் கொள்ள) லுஹர் தொழுகைக்காக வெளியேறி(வந்த)னர். அதில் (தாங்கி வந்த இருவரில்) ஒருவர் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆவார். அப்போது அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டதும் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கிருந்து தள்ளிக்கொள்ள முயன்றனர். அவர்களிடம் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தள்ளிச்செல்ல வேண்டாம் என சைகை செய்தனர். தாங்கி பிடித்து அழைத்து வந்த இருவரையும் பார்த்து ‘அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பக்கத்தில் என்னை நீங்கள் (இருவரும் சேர்ந்து) அமரச் செய்யுங்கள்‘ என்றனர். அதன்படி அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பக்கத்தில் ஒரு விலாப்பகுதியில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை அவ்விருவரும் அமரச்செய்தனர். அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நின்றவாறு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையைத் தொழுதனர். மக்களெல்லாம் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தொழுகையைத் தொழுதனர். (இந்நிலையில்) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருக்க (தொழுது கொண்டனர்.)

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நான் (அறிவிப்பவர்) வந்து நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்யுற்றிருந்து பற்றி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எனக்கு அறிவித்தார்களே அதை எடுத்துக் கூறட்டுமா?‘ எனக்(அறிவிப்பாளராகிய உபைதுல்லாஹ்) கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘சரி‘ எடுத்துக்கூறு என்றனர். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் (நான்) கேட்ட (மேற் கூறப்பட்டுள்ள) ஹதீதை அப்படியே எடுத்துச் சொல்லிக் காட்டினேன். அதிலிருந்து எதையும் அவர்கள் மறுக்கவில்லை. (எனினும்) ‘அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தோள் கொடுத்த) மற்ற மனிதரின் பெயரை (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட்டுக் காட்டினார்களா?‘ எனக்கேட்டார்கள். நான் ‘இல்லை என்றேன். அதற்கு அவர்தான் ‘அலி பின் அபீதாலிப்‘ ஆவார் எனக்கூறினார்.

அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு :
1. அரபியில் ‘இஷாத்‘ தொழுகையை கடைசி ‘இஷா‘ என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

2. நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்து தொழுதனர். அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களை இமாமாக ஏற்றுப் பின்பற்றிக் தொழுதனர். ஜனங்களொல்லாம் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பின்பற்றிக் தொழுதனர் என்பதை அறிந்து கொள்க


இமாம் பிந்திவிட்டால் அவரல்லாதவர் முந்துவார் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 320

முகீரா பின் ஷுஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் ‘தபூக்‘ (யுத்தத்தில்)கில் கலந்து கொண்டவராவார். (அவர் அறிவிப்பதாவது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது தேவையை நிறைவேற்றுவதற்காக ஃபஜ்ரு தொழுகைக்கு முன்பு (வெளியேறிச்) சென்றார்கள். அவர்களுக்காக (தண்ணீர்) பாத்திரத்தை அவர்களுடன் சுமந்தேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் என்பால் திரும்பி வந்ததும் பாத்திரத்திலிருந்து (தண்ணீரை) அவர்களது இரு கைகள் மீதும் ஊற்ற ஆரம்பித்தேன். அவர்களது இருகையையும் மும்முறைக் கழுவினார்கள். அதன்பிறகு தனது முன்கை வழியாக ஜுப்பாவைவெளிப்படுத்த முயன்றார்கள். அவர்களது ஜுப்பாவின் இரு முன்கைகளும் இருக்கமாக இருந்தது. ஜுப்பாவினுள் தங்களது இருகைகளையும் நுழைத்து ஜுப்பாவின் கீழ்பாகத்திலிருந்து தங்களது முன்கையை வெளியாக்கினார்கள். தங்களது முன்கையை முழங்கை மொழி வரை கழுவினார்கள். அதன்பிறகு தங்களது இரு காலுறைகளின் மீதும் தடவினர். அதன்பிறகு என்பால் முன் வந்தனர். அடுத்து முகீரா கூறுகிறார்.

(அதன்பிறகு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் (நானும்) முன்னோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் ஜனங்களை முற்படுத்தி அவர்களுக்கு தொழுகை நடத்தி கொண்டிருக்க ஜனங்களை நாங்கள் பெற்றுக் கொண்டோம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ரக்அத்தில் ஒரு ரக்அத்தை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தார்கள். (தொழுது கொண்டிருந்த) ஜனங்களுடன் மற்ற ரக்அத்தை தொழுதார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸலாம் கொடுத்ததும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையைப் பூர்த்தி செய்து கொள்ள எழுந்தனர். அச்சம்பவம் முஸ்லீம்களை திடுக்கிடச் செய்தது. தஸ்பீஹை அதிகப்படுத்தினார்கள். நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு அவர்களை முன்னோக்கினர். அதன்பிறகு அழகாகச் செய்தீர்கள் அல்லது நிச்சயமாக சரியாகச் செய்து விட்டீர்கள் எனக்கூறினார்கள். அவர்கள் (ஜனங்கள்) தொழுகையை முதல் நேரத்தில் தொழுதது அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்