Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 14

தொழுகை பற்றிய நூல்
 
தொழுகையில் ‘உம்முல் குர்ஆன் (‘அல்பாத்திஹா‘ அத்தியாயத்தை) ஓதுவது கட்டாயம் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 281

யார் ஒரு தொழுகையைத் தொழுவது அதில் உம்முல்குர்ஆனை ஓதவில்லையோ அவரது தொழுகை குறைக்கப்பட்ட(நிறைவற்ற)தாகும் என மும்முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

நாங்கள் இமாமுக்குப்பின்னால் இருக்கிறேம். (அப்போது ஓத வேண்டுமா?) என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது. உன் மனதிற்குள் அதை நீ ஓதிக்கொள் என கூறினார்கள். அடுத்து தொழுகையை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் நேர்பாதியாக பங்கு வைத்துவிட்டேன். எனது அடிணான் எதைக்கேட்டானோ அது அவனுக்கு உண்டு.

அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்” எனக் கூறுவானேயானால், எனது அடியான் என்னை புகழ்ந்து விட்டான் என்பதாக உயர்வான அல்லாஹ் கூறுகிறான். “அர்ரஹ்மானிர்ரஹிம்” என அவன் கூறினால், என் மீது எனது அடியான் புகழ்ச்சியைக் கூறிவிட்டான் என அல்லாஹ் கூறுகிறான். “மாலிகி யவ்மித்தீன்” என அவன் கூறினால் எனது அடியான் என்னை உயர்த்தி கௌரவித்து விட்டான் என அல்லாஹ் கூறுகிறான்.

அடுத்து ஒரு முறை என்பால் எனது அடியான் தன்னை ஒப்படைத்து விட்டான் எனக்கூறுகிறான். அவன் “இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தஈன்” என கூறுவானேயானால் இது எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் உள்ளதாகும். எனது அடியான் எதைக் கேட்டானோ அது அவனுக்கு உண்டு. “இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம் ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம் கைரில் மக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன்” என அவன் கூறினால் இது என் அடியானுக்குரியது. என் அடியான் எதைக் கேட்டானோ அது அவனுக்கு உண்டு என உயர்வான அல்லாஹ் கூறிவிட்டான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நிச்சயமாக நான் கேட்டிருக்கிறேன் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தொழுகையில் இயன்றவரை ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 282

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் நுழைந்தனர். (அப்போது) ஒரு மனிதர் நுழைந்து தொழுது விட்டு அதன்பிறகு வந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறினார். அல்லாஹ்வின் தூதர் (அலைஹிஸலாம்) அவர்கள் பதில் சொல்லிவிட்டு, திரும்பச் சென்று தொழுவீராக! நிச்சயமாக நீர் தொழவில்லை என்றனர். அம்மனிதர் திரும்பிச்சென்று முன்பு தொழுததைப்போன்றே தொழுதுவிட்டு, அதன்பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்பாhல் வந்து (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன் மீது ஸலாம் உண்டாகுக, எனக்கூறிவிட்டு அதன்பிறகு திரும்பிச் சென்று தொழுவீராக! காரணம் நிச்சயமாக நீர் தொழவில்லை எனக் கூறினார்கள். இவ்வாறு அந்த மனிதர் மூன்று முறை செய்யும் வரை திரும்ப திரும்ப கூறினார். (அடுத்த அந்த) மனிதர் உண்மையைக் கொண்டு உங்களை அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! இது அல்லாததை அழகாகச் செய்ய என்னால் இயலாது. ஆகவே எனக்குக் கற்றுத்தாருங்கள் என்றார்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “தொழுகைக்காக நீர் தயாராகிவிட்டால் தக்பீர் கூறுவீராக. அதை அடுத்து குர்ஆனில் உம்முடன் இருப்பவற்றில் (தெரிந்தவற்றில்) இலேசான(குர் ஆனிலிருந்து எதை இலகுவாக ஓத வருமோ, உமக்கு அ)தை ஓதுவீராக. அதன்பிறகு அமைதியாக ருகூஉ செய்யும்வரை ருகூஉவில் இருப்பீராக. அதன்பிறகு சரியாக நீர் நிற்கும் வரை நிமிர்ந்து விடுவீராக! அதன்பிறகு அமைதியாக சாஷ்டாங்கம் செய்வீராக. அதன்பிறகு அமைதியாக இருப்பு இருக்கின்ற வரை உயர்வீராக. அதன்பிறகு உமது எல்லாத் தொழுகையிலும் அவ்வாறே செய்வீராக” எனக்கூறினர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

இமாமுக்கு பின்னால் ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 283

எங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகை அல்லது அஸர் தொழுகையை தொழ வைத்தார்கள். (தொழுகையை முடித்துக் கொண்டு) எனக்குப்பின்னால் “ஸப்பிஹிஸ்மரப்பிகல் அஃலா”வை (என்ற அத்தியாத்தை) ஓதியது யார்? எனக்கேட்டனர். (அப்போது) ஒரு மனிதர் நான் எனக்கூறி, அதன்மூலம் நன்மையைத் தவிர வேறு எதையும் நான் நாடவில்லை என்றார். நிச்சயமாக உங்களில் சிலர் அதை ஓதியதன் மூலம் என்னோடு பிணங்கிக் கொண்டனர் எனக்கூறினார்கள்.

புகழுதல், ஆமீன் கூறுதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 284

இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள். நிச்சயமாக யாருடைய ஆமீன் அமரர்களின் ஆமீனுக்கு ஒத்து இருக்கிறதோ அவரது பாவத்தில் முந்தியதை அவருக்காக மன்னிக்கப்படுகிறது என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆமீன்” எனக் கூறக்கூடியவர்களாக இருந்தனர் என இப்னு ஷிஹாப் கூறுகிறார்.

ஸுபுஹு தொழுகையில் ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 285

ஸம்மாக் பின் ஹர்ப் ரளியல்லாஹு அன்ஹு என்பவர் ஜாபிர் பின் ஸம்ரா என்பவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையைப் பற்றிக்கேட்டேன். (அதற்கவர்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை இலோசாகத் தொழுது வந்தார்கள். அவர்களின் தொழுகையைப் போன்று தொழக்கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை எனக்கூறினார்.

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ரு(த் தொழுகையி)ல் “காப் வல்குர்ஆனில் மஜீது”வை (எனும் அத்தியாயத்தை)யும், அது போன்றதையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர் என எனக்கு அவர் அறிவித்தார் எனவும் கூறினார்.

லுஹரிலும், அஸரிலும் ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 286

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு தொழ வைக்கக்கூடியவர்களாக இருந்தனர். லுஹரிலும் அஸரிலும் முந்திய இரு ரக்அத்துகளில் அல்ஹம்து அத்தியாத்தையும் ஒரு அத்தியாத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர். சில சமயங்களில் வசனத்தை எங்களுக்கு கேட்கச் செய்வார்கள். பிந்திய இரண்டு ரக்அத்துகளில் “அல்ஹம்து” அத்தியாத்தை மட்டும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 287

நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகையில் முந்திய இரண்டு ரக்அத்துகளில் ஒவ்வொரு ரக்அத்திலும் முப்பது வசனங்கள் அளவும் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் பதினைந்து வசனங்கள் அளவும் அல்லது அதில் (முப்பதில்) பாதி அளவு (ஓதக் கூடியவர்களாகவும் இருந்தனர்). அஸர் தொழுகையில் இரு ரக்அத்துகளில் ஒவ்வொரு ரக்அத்திலும் பதினைந்து வசனங்கள் ஓதுகின்ற அளவிற்கும் பிந்திய இரு ரக்அத்துகளில் அதில் பாதி அளவையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : அபூஸயீது அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு

மஃக்ரிபு தொழுகையில் ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 288

‘வல்முர்ஸலாத்தி உர்ஃபன் என்ற அத்தியாத்தை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதிக் கொண்டிருந்ததை நிச்சயமாக உம்முல் பழ்ல் பின்த்துல் ஹாரிஸ் செவியுற்று விட்டு, எனதருமை மகனே! “நிச்சயமாக அது (வல்முர்ஸலாத்தி உர்ஃபன் என்பது) தான் மக்ரிபில் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதுகின்ற போது கடைசியாக நான் செவியுற்றதாகும் என்பதை, இந்த அத்தியாத்தை நீ ஓதியதன் மூலம் எனக்கு நீ நினைவுபடுத்திவிட்டாய்‘‘ எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு

கடைசி இஷாவில் ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 289

முஆது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுது முடித்துவிட்டு அதன்பிறகு வந்து தனது கூட்டத்தாருக்கு இமாமத் செய்யக்கூடியவர்களாக இருந்தனர். ஒரு இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஷாத் தொழுகையை தொழுது விட்டு அதன்பிறகு தனது கூட்டத்தாரிடம் வந்து அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகையை நடத்தினர். (அவ்வாறு தொழுகை நடத்தியபோது) அல்பகாரா அத்தியாத்தை (ஓத) ஆரம்பித்தார். (அப்போது) ஒரு மனிதர் (கூட்டத்திலிருந்து) திரும்பி ஸலாம் சொல்லிவிட்டு அதன்பிறகு அவர் தனியாக தொழுது விட்டு திரும்பிவிட்டார். (அவரைப் பார்த்த ஜனங்கள்) இன்னவரே! ‘நீர் நயவஞ்சகராக ஆகிவிட்டிhர்‘ என்றார்கள். ‘அல்லாஹ்வின் மீது சக்தியமாக அவ்வாறில்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இதைப்பற்றி நான் உறுதியாகவே அறிவிப்பேன்‘ எனக்கூறினார். (அவர் கூறியவாரே) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக நாங்கள் (வயல்களுக்கு) தண்ணீர் இறைத்து ஊற்றுபவர்கள். பகலெல்லாம் வேலை செய்கிறோம். நிச்சயமாக மஆத் ரளியல்லாஹு அன்ஹு உங்களுடன் இஷாவைத் தொழுதுவிட்டு வருகின்றார். அதன்பிறகு (எங்களுக்கு இமாமாக தொழவைக்கின்ற போது) ‘அல்பகரா‘ அத்தியாத்தை ஓத ஆரம்பித்தார் என்றார். அதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஅதை நோக்கி முன்னோக்கி வந்து ‘முஆதே! நீர் குழப்பம் செய்கிறீரா?‘ எனக்கேட்டவிட்டு இன்ன இன்னவற்றை ஓதுவீராக என்றனர்.

‘வஷ்ஷம்ஷி வளுஹாஹா‘ அத்தியாத்iயும் ‘வள்ளுஹா‘ அத்தியாத்தையும், ‘வல்லைலி இதாயஃக்ஷா‘ அத்தியாத்தையும் ‘ஸப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலா‘ அத்தியாத்தையும் ஓதுவீராக! என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என (ஜாபிர் தமக்கு அறிவித்ததாக உறுதியாகவே அபூஜ்ஜுபைர் நமக்கு அறிவித்தார் என அம்ருவிடம் கூறினேன். அம்ரும் இது போன்றே (கூறினார் என) ஸுப்யான் கூறுகிறார்.

‘ருகூவிலும் ஸுஜுதிலும் இமாமை முந்திச் செல்வது தடுக்கப்பட்டதாகும்‘ என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 290

எங்களுக்கு ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்தினார்கள். தொழுகையை முடித்துக் கொண்டதும் தங்களது முகத்தை எங்களின் பக்கமாக திருப்பி முன்னோக்கினார்கள். ‘மனிதர்களே! நிச்சயமாக நான் உங்களின் இமாமாக இருக்கிறேன். ஆகவே ருகூவிலும் ஸுஜுதிலும் நிலையிலும் திரும்புவ(ஸலாம் கொடுப்ப)திலும் தொழுகையில் என்னை முந்தாதீர்கள். நிச்சயமாக நான் உங்களை எனக்குப் முன்னும் பின்னும் பார்க்கிறேன் எனக் கூறினார்கள்.

முஹம்மதின் உயிர் யார்வசம் இருக்கிறதோ! அவனின் மீது சத்தியமாக! நான் பார்ப்பதையெல்லாம் நீங்கள் பார்த்தால் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள் என்றனர். (அங்கிருந்தவர்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்ன கண்டீர்கள்? எனக்கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனத்தையும் நரகத்தையும் கண்டேன் என்றனர்.

அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு :

இந்த பார்வை அல்லாஹ்வின் அனுமதியோடு இந்நிலையில் மட்டுமே இருந்தது. இதுவன்றி எல்லா நேரங்களிலும் இதுபோன்றே பார்கிறார்கள் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இல்லை. ஒரு சிலர் எல்லா நேரங்கள்-நிலைகளிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் ஆஜராகிக்கொண்டும் இருக்கிறார்கள் என்று கூறியும் அதையே கொள்கையாகக் கொண்டும் உள்ளனர். அல்லாஹ்வின் வேதத்தில் பல நூற்றுக்கணக்கான வசனங்களும் அவற்றிற்கு விளக்கங்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பல நூறு ஹதீஸ்களும் இக்கொள்ளை தவறானது என்றும் இக்கொள்கையை கொண்டிருப்பவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. “முக்காலத்தின் நிலைகளை அறிகின்ற ஆற்றல் அந்த வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறுயாருக்கும் இல்லை”. நபிமார்கள் அலைஹிமுஸலாம் என்பவர்கள் அல்லாஹ்விடத்திலிருந்து அமரர் மூலமாக அல்லது திரைக்கு அப்பாலிருந்து அல்லது மனதில் உதிக்கும் உதிப்பாக-அறிவிப்பாக ஆகிய இம்மூன்றுவழிகளில் உயர்வான அல்லாஹ்விடமிருந்து செய்திகள் அறிவிக்கப்பட்டு அச்செய்திகளை வாங்கி அறிவிக்கக்கூடியவர்களே ஆவார். அல்லாஹ்விடமிருந்து அறிவிப்புகள் கிடைக்காதவரை வானம் பூமி இரண்டிலும் நடக்கக்கூடிய எந்த விஷயத்தைப்பற்றியும் அவர்களால் நிச்சயமாக தெரிந்து கொள்வே முடியாது. வாசகர்கள் இதை தெளிவாக தெரிந்துகொள்ள ஒரு பெரும் சம்பவத்தை மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன். அதன்சுருக்கம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விண்ணுலக பயணத்தை முடித்து திரும்பி மக்கத்துக் குறைஷிகளுக்கு அச்சம்பவத்தை கூறிக்கொண்டு இருந்த போது அவர்களுடைய இரவுப்பயணம் பற்றியும் பைத்துல் முகத்தஸில் உள்ள பல விஷயங்களையும் அடுக்கடுக்காகக் கேட்டனர். அதைச்செவியுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போது ஏற்ப்பட்ட சிரமம் அதற்கு முன் எனக்கு எப்போதும் ஏற்ப்பட்டதே இல்லை ஏனென்றால் அங்கு நான் கண்டவற்றை என் மனதில் நான் இருத்திக்கொள்ளவில்லை. இவ்வகை கஷ்டத்தில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ள பைத்துல் முகத்தஸை எனக்காக அல்லாஹ் உயர்த்திக் காட்டினான். அப்போது தான் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடிந்தது என்ற இந்த சம்பவத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நமக்கு சொல்லிக்காட்டுகிறார்கள். அதுபற்றிய ஹதீஸ் எண் 80 பதிவாகியுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முக்காலமும் மறைவான விஷயங்களும் தெரியும் என யாரோசொல்லி வைத்ததை- அந்தத் தவறான கொள்கையை-இந்த ஆதார அடிப்படையில் அது தவறு தான் என்பதை உணர்ந்து முக்காலத்தையும் அறிந்து கொண்டிருக்கும் பார்த்து கொண்டிருக்கும், பார்த்தவைகளுக்கு பரிகாரம் செய்து கொண்டிருக்கும் சகல வல்லமையுள்ள இந்த அல்லாஹ்வின் மகத்துவத்தைப் புரிந்து அவனிடமே பாவமன்னிப்பு கேட்டு அவனின் முழு அருளைக்பெற அவனே நல்லுதவி செய்வானாக ஆமீன்.

‘இமாமுக்கு முன் தலையை உயர்த்துவது தடுக்கப்பட்டதாகும்‘ என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 291

“(தனது) தொழுகையில் (எவர்) இமாமுக்கு முன் தலையை உயர்த்துகிறாரோ, அவரது உருவத்தை கழுதையின் உருவமாக அல்லாஹ் மாற்றி விடுவதிலிருந்து (அவர்) அச்சமற்று இருக்க மாட்டார்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

இருகைகளையும் ருகூஉவில் இரு தொடைகளுக்கு மத்தியில் ஆக்கிக்கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 292

அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களது வீட்டிற்கு (அல்கமா, அஸ்அது ஆகிய) நாங்களிருவரும் வந்தோம். இவர்கள் உங்களுக்குப்பின் தொழுதார்களா? எனக்கேட்டார். நாங்கள் இல்லை என்றோம். (அதற்கவர்) எழுந்து தொழுங்கள்! என்றார்.பாங்கோ, இகாமத்தோ கூறுமாறு எங்களுக்கவர் கட்டளையிடவில்லை. அவருக்குப்பின்னால் நிற்பதாகச் சென்றோம். எங்களில் ஒருவரை அவரின் வலப்பக்கமும், மற்றவரை அவரின் இடப்பக்கமும் ஆக்கினார். அவர் ருகூஉ செய்த போது எங்களது கைகளை முட்டுக்கால்களின் மீதாக்கினோம். அதன்பிறகு எங்களது கைகளில் அடித்துவிட்டு அவரது இரு முன்கைகளுக்கு இடையில் சேர்த்து தனது இரு தொடைகளுக்கு மத்தியில் அவ்விரண்டையும் நுழைத்துக் கொண்டார் எனக்கூறினார். அவர் தொழுது விட்டு உங்களுக்கு தலைவர் இருப்பார்(வருவார்)கள், தொழுகையை அதன்நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்கள், மரணம் சம்பவிக்க (சக்கராத்து நிலையில்) இருக்கும் ஒருவருக்கு அவர் மரணிப்பதற்கு இடையில் இடைவெளி எவ்வளவுகுறைவோ? அவ்வாறு சூரியன் அஸ்தமிக்க நெருங்கும் வரை (அதை) தொழுகையை (முற்றிலும்) பிற்படுத்திவிடுவார்கள். அவ்வாறு அவர்களை செய்யக்கண்டால் தொழுகையை அதன் நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். அவர்களுடன் தொழும் தொழுகையை நபிலாக ஆக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் மூவராக இருப்பின் அனைவரும் தொழுது கொள்ளுங்கள். அதைவிட அதிகமாக இருப்பின் உங்களில் ஒருவர் இமாமாக இருக்கவும். உங்களில் ஒருவர் ருகூஉ செய்தால் அவரது இரு கொடங்கைகளையும் தொடையின் மீது விரித்து (விலக்கி) வைக்கவும். அவரது இரு முன்கைகளைச்சேர்த்து (இரு தொடைகளுக்கு மத்தியில்) வைக்கவும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விரல்கள் மாறுபட்டு இருப்பதை நான் பார்பவனைப்போன்று இருக்கிறேன். அவ்வாறே அவர்களையும் நான் காண்கிறேன் என அப்துல்லா பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : அஸ்வது, அல்கமா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு :

இந்த ஹதீஸில் சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளது, அதை நிரந்தரமாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யவில்லை அவைகளில் மாறுதல் ஏற்ப்பட்டு விட்டது அதை விளக்கிக் கூறுவது கடமையாதலால் இங்கு அதைக் கூறுகிறோம்.

(1) இமாமின் வலப்புறமும் இடப்புறமும் இருவர் நிற்பது.

இதில் சரியான சுன்னத்து அவ்விருவரும் இமாமுக்கு பின்னால் நிற்பதே. முஸ்னது அஹ்மதில் 1537ஃ3ஃ116 இலக்கமிட்ட ஹதீஸில் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் வந்துள்ளது.

(2) கைகளைச் சேர்த்து முன்கைகளை இரு தொடைகளுக்கு மத்தியில் நுழைத்தல்.

இது மாற்றப்பட்டுவிட்டது. அடுத்த ஹதீஸில் தெளிவு செய்யப்பட்டிருப்பது போன்று சுன்னத்தான முறை முட்டுக்கால்களைப் பிடிப்பதாகும்.

(3) பாங்கு, இகாமத்து கூறுமாறு அவர் கூறுவில்லை.

தொழுகையில் தவறுசெய்தவருக்கு விளக்கிக் கூறியபோது அவரை பாங்கு இகாமத்து கூறுமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தருகிறார்கள். அதுவே சரியான சுன்னத்தாகும்.

இரு கைகளை முட்டுக்கால்களின் மீது வைப்பது பற்றியும் இரு முட்டுக்கால்களுக்கிடையில் நுழைத்துக்கொள்ள வேண்டுமென்பது மாற்றப்பட்டுவிட்டது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 293

எனது தந்தைக்கு அருகாமையில் நான் தொழுதேன். எனது இரு கைகளையும் எனது இரு முட்டுக்கால்களுக்கும் மத்தியில் ஆக்கிக்கொண்டேன் (அதைப்பார்த்த எனது தந்தை) உனது இரு முன்கைகளையும் உனது இரு முட்டுக்கால்களின் மீது ஆக்கிக்கொள் என எனக்கூறினார். அதற்குப்பிறகு ஒரு முறையும் (முதலில் செய்தது போலவே) அவ்வாறு செய்தேன். எனது இரு கைகளின் மீது அடித்துவிட்டு, இவ்வாறு செய்வதிலிருந்து நாம் தடுக்கப்பட்டு விட்டோம். முன்கைகளை முட்டுக்காலின் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டு உள்ளோம் எனக்கூறினார்.

அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஅது ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு :

ருகூஉவில் இருகைகளையும் இரு முட்டுக்கால்களின் மீது எதையோப் பிடிப்பது போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதே இறுதியாக நிருபனமான சுன்னத்தாகும். இரண்டு முட்டுக்கால்களுக்கு மத்தியில் இருகைகளையும் நுழைத்தக்கொள்வது மாற்றப்பட்டுவிட்டது என்ற செய்தி இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கிடைத்ததால் 292-வது ஹதீஸில் கண்டுள்ளவாறே செய்யவேண்டுமென வற்புறுத்தினார்கள். இச்செயல் மாற்றப்பட்டுவிட்ட செய்தி அவர்களுக்கு தெரிந்திருந்தால் நிச்சயமாக முன்பு செய்ததையே செய்யவேண்டுமென இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வற்புறுத்தி இருக்கமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்க

ருகூஉவிலும் ஸுஜுதுவிலும் கூறப்பட வேண்டியவை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 294

‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களது ‘ருகூஉ‘விலும் ‘ஸுஜுது‘திலும், “ஸுப்ஹான கல்லா ஹும்ம ரப்பனா வபிஹம்திக, அல்லாஹும்மஃக் ஃபிர்லீ” என அதிகமாக கூறக்கூடியவர்களாக இருந்தனர். குர்ஆனில், (உமது இரட்சகனின் புகழைக்கொண்டு தஸ்பீஹும் செய்து அவனிடமே பாவமன்னிப்பும் கேட்பீராக! என்ற) வசனத்திற்கு விளக்கமாக இதைக் கூறிவந்தார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

ருகூஉவிலும் ஸுஜுதிலும் திருக்குர்ஆனை ஓதுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 295

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தங்களின் அறையின்) திரையை விலக்கிய போது ஜனங்களெல்லாம் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பின்னால் வரிசைகளில் இருந்தனர். அப்போது மனிதர்களே! நபித்துவத்தின் நன்மாராயங்களில் (ஒரு) முஸ்லீம் பார்க்கக்கூடிய அல்லது அவருக்கு காட்டப்படக்கூடிய நல்ல கனவுகளைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. ‘ருகூஉ‘ செய்த நிலையில், ‘ஸுஜுது‘ செய்த நிலையில் திருக்குர்ஆனை ஓதவதிலிருந்து நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் என்பதை தெரிந்து கொ(ள்ளுங்க)ள். ஆகவே ‘ருகூஉ‘வில் அல்லாஹ்வை மகத்துவப்படுத்துங்கள் (ஸுப்கான ரப்பியல் அளீம்) எனக்கூறுங்கள். ஸுஜுதிலும் துஆவில் சிரத்தையெடுங்கள். (அதிகமாக துஆ செய்யுங்கள்) உங்களுக்கு அங்கீகரிக்கப்படுவதற்கு அது மிக உரியதாகும் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு, அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

‘ருகூஉ‘விலிருந்து உயர்ந்தால் (நிமிர்ந்தால்) என்ன கூறவேண்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 296

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ருகூஉ‘விலிருந்து தங்களது தலையை உயர்த்தினால் “ரப்பனா லக்கல்ஹம்து மில் அஸ்ஸமாவாத்திவல் அர்ளி வமா பைனஹுமா, வமில்அ மாஷிஃ(த்)தமின் ஸைஇன் பஅது. அஹ்லத்தனாகி வல்மஜ்தி அஹக்கு மா காலல் அப்து வகுல்லுனா ல(க்)க அப்துன் லாமானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத்த வலாயன்ஃபஉ தல்ஜத்தி மின் (க்)கல் ஜத்து“ எனக்கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயிது அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு

ஸுஜுதுவின் சிறப்புகளும் அதை அதிகமாக செய்வதை ஆசையூட்டுவதும் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 297

நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் உரிமை எழுதப்பட்ட தவ்பான் ரளியல்லாஹு அன்ஹு என்பவரைச் சந்தித்து ‘எதை (எச்செயலை) நான் செய்தால் அல்லாஹ் அதன் மூலம் என்னைச் சுவனத்தில் நுழையச் செய்வானோ? அத்தகைய ஒரு செயலைப்பற்றி எனக்கு சொல்வீராக!‘ என்றேன். (அல்லது) ‘செயல்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான ஒரு செயலைப்பற்றி எனக்குத் தெரிவிப்பீராக!‘ என நான் கேட்டேன். இதைச் செவியுற்ற தவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அமைதியாக (பேசாமல்) இருந்தார். (அதன்பிறகும்) அது பற்றி நான் கேட்டேன். பேசாமலிருந்து விட்டார். மூன்றாம் முறையாக அதுபற்றி நான் கேட்டேன். அதற்கு தவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். “அது பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் அல்லாஹ்வுக்கு அதிகமாக ‘ஸஜ்தா‘ செய்வதை கடைபிடித்துக் கொள். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நீ ஒரு ‘ஸஜ்தா‘ செய்வதின் மூலம் அல்லாஹ் உனக்கு ஒரு தரத்தை அதிகப்படுத்தியும் அதன்மூலம் உனது தவற்றில் ஒன்றை அழித்துமே தவிர நீ ஸஜ்தா செய்வதில்லை” எனக்கூறினார்கள்.

இதற்கு பிறகு அபுத்தர்தாஉ ரளியல்லாஹு அன்ஹுவை நான் (அறிவிப்பவர்) சந்தித்தேன். இதுபற்றி அவரிடம் கேட்டேன். தவ்பான் ரளியல்லாஹு அன்ஹு கூறியதைப் போன்றே கூறினார்.

அறிவிப்பவர் : மிஃதான் அபீதல்ஹா அல்யஃமரிய்யு

ஸஜ்தாவில் துஆ செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 298

‘அடியான் அவனது இரட்சர்களுக்கு மிக அருகாமையில் இருப்பது அவன் ஸஜ்தா செய்த நிலையில்தான். ஆகவே பிரார்த்தனையை அதிகமாகச் செய்யுங்கள்‘ என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எத்தனை (உறுப்புகளின்) மீது ஸஜ்தா செய்வது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 299

“ஏழு எலும்புகளின் மீது நான் ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடப்பட்டேன். (அதாவது) நெற்றி (தங்களது மூக்கின் பாலும் சைக்கினை செய்தார்) இருகைகள், இரு(முட்டுக்)கால்கள், இரு பாதங்களின் ஓரங்(விரல்)கள்” (ஆகியவைகளாகும்) நெற்றிக்கும் தரைக்கும் மத்தியில் உடையையோ, (தலை) முடியையோ சேர்த்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும் என்று நாங்கள் கட்டளையிடப்பட்டோம் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த அறிவிப்பில் உள்ளது போன்று ஏழு எலும்புகள் என்றும், ஏழின்மீது என்றும் மற்ற அறிவிப்பில் உள்ளது அதன் பொருள்: ஸஜ்தா ஏழு உறுப்புகளின் மீது இருக்க வேண்டும். அந்த ஏழு உறுப்புகளும் தரையில் சரியாக வைக்கப்பட வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். அதற்கு மேல் எட்டாவதாக மூக்கை தரையில் இருக்கச் செய்ய வேண்டும்.

ஸஜ்தாவில் நிதானமாகவும், இரு முழங்கைகளை உயர்த்தியும் இருக்க வேண்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 300

“ஸஜ்தாவில் சமமாக (நிதானமாக அதன் உறுப்புகளை) வையுங்கள், உங்களில் யாரும் தனது கொடங்கைகளை நாய் விரிப்பது போல் விரிக்கவேண்டாம்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்